ஸ்பெயின் நாட்டு அரசி

ஸ்பெயின் நாட்டு அரசி
0Shares
ஸ்பெயின் நாட்டு அரசி
கிரேக்க நாட்டு ராஜமாதாவின் புதல்வி Sophia தற்போது ஸ்பெயின் நாட்டு அரசி. தன் அன்னை கிரேக்க ராணியைப் போலவே பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவள். கிரேக்க நாட்டு ராஜ குடும்பமே பெரியவாளை மட்டுமே தங்கள்
குருவாக சரணடைந்துள்ளது.
பெரியவா உத்தர சிதம்பரமான சதாராவில் ஏறக்குறைய ஒருவருஷம் தங்கியிருந்த சமயம், ஸ்பெயின் அரசி அங்கு வந்து நான்கு நாட்கள் தங்கி பெரியவாளை தர்சனம் பண்ணினாள். அவ்வூரில் உள்ள ரொம்ப சாதாரண சின்ன ஹோட்டலில்தான்
தங்கினாள். ப்ரபல நாட்டிய மேதை பத்மா சுப்ரமண்யம் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களை அரசி Sophia தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து மிகுந்த அன்புடன் ஒரு வரவேற்பு குடுத்தார்.
அப்போது அவர்கள் உரையாடியபோது,
” ஒரு பெரிய நாட்டின் அரசியான நீங்கள், அட்டாச்டு பாத்ரூம் கூட இல்லாத அந்த சின்ன ஹோட்டலில் எப்படி தங்க முடிந்தது?” என்று கேட்டார் பத்மா
சுப்ரமண்யம்.
அதற்கு அந்த பேரரசி குடுத்த பதில்,
“…….காஞ்சி பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும் என்றால், நான் குடிசையில் கூடத் தங்குவேன் ! தெருவில் கூட நடப்பேன்! அவரை தர்சனம் பண்ணும் துமட்டுமே உண்மையிலேயே நான் வாழ்கிறேன்! மற்ற நேரங்களில் எல்லாம் ஏதோ மூச்சு விடுகிறேன். அவ்வளவுதான்! இந்த அரண்மனை, ராஜ மரியாதை, இந்த சூழல் எல்லாம் அநித்யம்! பெரியவாளை தர்சிக்கும் இன்பம்தான் மெய்யானது. ித்யமானது!….அவரை ஜகத்குரு என்று அழைப்பதைவிட, “ஜகன்மாதா” என்று
அழைக்கத் தோன்றுகிறது!”……. பெரியவாளைப் பற்றி பேசும், நினைக்கும் பாக்யத்தால், பனித்த கண்களுடன் கூறினாள் கிரேக்க நாட்டு இளவரசி, ஸ்பெயின் நாட்டு அரசி!

Comments

  1. Aleman Muralidhar

    She is on the path of realisation…

Leave a Reply to Aleman Muralidhar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *