விளையாட்டில் உள்ள தத்துவம்
கீற கடைஞ்சு பருப்பு கடைஞ்சு கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு காமிப்பார்கள் பெரியோர்கள். அந்த விளையாட்டில் உள்ள தத்துவம் தெரியுமா?
———————————————————————————
சிறு வயதில் நாம் அனைவரும் கீரை கடஞ்சு பருப்பு கடைஞ்சு விளையாடுவோம்.
விளையாட்டு:
——————–
பெரியோர்கள் நமது கையை நீட்ட சொல்லி நமது ஐந்து விரலையும் நீட்ட சொல்லி,
சுண்டு விரல் – கற்கண்டு சாதம்
மோதிர விரல் – தேங்காய் சாதம்
நடு விரல் – குழம்பு சாதம் (வத்தல்)
ஆள் காட்டி விரல் – வாழைப்பூ சாதம்
கட்ட விரல் – மோர் சாதம்.
என்று சொல்லி நமது கரத்தில் பருப்பு கடைஞ்சு கீரை கடைஞ்சுன்னு சொல்லிட்டு, ஒவ்வொரு விரலாய் பிடிச்சு இது அப்பாவிற்கு, இது அம்மாவிற்கு, இது தாத்தாவிற்கு, இது மாமாவுக்கு, இது அத்தைக்குன்னு சொல்லிட்டு, கழுவி கழுவி காக்காவிற்கு ஊத்துன்னு சொல்லிட்டு, நண்டு ஊறுது நரி ஊறுதுன்னு சொல்லிட்டு அந்த குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பர்.
தத்துவம்:
————–
உணவில் அறுசுவையையும் சேர்த்துகனும், கீரையை அவசியம் சேர்த்துகனும். இருப்பதை பகிற்ந்துண்டு வாழனும். இறுதியில் குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பதின் காரணம், கொடுக்கும்போது சந்தோஷமாக சிரித்துக் கொண்டு கொடுக்கனும். என்ன அழகாய் விளையாட்டின் மூலம் குழந்தைக்கு எவ்வளவு உயர்வான கருத்துகளை நமது முன்னோர்கள் பதிய வைத்திருக்கிறார்கள் பாருங்கள் மக்களே….
———————————————————————————
இவ்வளவு சிறப்பாய் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க யாரால் முடியும் என்று நம்புகிறீர்களா மக்களே! இப்பேர்பட்ட கற்றுக் கொடுக்கும் தன்மையைத்தான் இன்றைக்கு இழந்து வருகிறோம்.
Super to know that even children’s games have value