ழகரம் – சிறப்பு ழகரம் !
நம் உடம்புக்குள்ளே உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மூளையில் உள்ள இரண்டு மிக முக்கியமானவை. அவை பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகள். உடல் இயக்கத்தினை பிட்யூட்டரி சுரப்பி பார்த்துக்கொள்ள பீனியல் சுரப்பியோ மன ஓட்டத்தினை கவனித்துக்கொள்கிறது. அதனால்தான் பீனியல் சுரப்பியை ”மனோன்மணி சுரப்பி‘’ என்று தமிழில் அழைப்பார்கள். மன+ உள் + மணி = மனோன்மணி.
மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ..தமிழுக்கு உண்டு.. அது சிறப்பு எழுத்து ” ழ” கரம் … நாக்கை மடித்து , உள் நாக்கை அழுத்தி , தொண்டையிலிருந்து உச்சரிக்க வேண்டிய எழுத்து ”ழ” கரம் …இதில் என்ன சிறப்பு என்றால் , இந்த ’ழ’கரத்தை நாம் உச்சரிக்கிறபொழுதெல்லாம் , மூளையில் உள்ள பீனியல் சுரப்பியானது தூண்டப்படுவதால், மனத்தில் உற்சாகம் பிறக்கிறது ….எண்ணங்கள் லேசாக , நம்மை துயரத்தில் ஆழ்த்தும் மனோபாவத்திலிருந்து மெல்ல விடுவித்துக்கொள்கிறோம் நம்மை அறியாமலேயே….
இதை உணர்ந்துதான் , நமது முன்னோர்கள் , தமிழின் முக்கியமான வார்த்தைகள் எல்லாம் ’ழ’கர சொற்களாக வருமாறு
படைத்திருக்கிறார்கள்..
வாழ்க்கை , தொழில் , தமிழ் , ஒழுக்கம், மழை , அழகு , விழா , வாழ்த்து , உழவு , உழைத்தல் .. …
வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய பண்பான ஒழுக்கம் , உலகமே வாழ தேவையான மழை , உயிர் வாழ மிக முக்கியமான உணவினை தருகின்ற தொழிலான உழவு , பேசுகிற மொழியிலேயே ”ழ”கரத்தோடு தமிழ்…. என
முக்கிய சொற்களை ழகரத்தில் அமைத்ததை பார்க்கும்போது தமிழர்களின் சிந்தனையும், வாழ்வியலும் எவ்வளவு தூரம் ஓங்கி வளர்ந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது….
In Siva Raja Yoga the bending g of tongue inward is a pretty requisite to calm down the wavering mind. Siddahrs indirectly teach us how to proceed to unite Atman with Conscience. Thanks Ramesh.
Glad that you like the post Chikappa.