‘மதுரை வைத்தியநாத ஐயர்’

‘மதுரை வைத்தியநாத ஐயர்’
0Shares
‘மதுரை வைத்தியநாத ஐயர்’
‘மதுரை வைத்தியநாத ஐயர்’ – இந்த பெயரை எங்கோ கேள்விப்பட்டது போல் இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். இல்லை என்றால் மேலே படிக்கவும்.
தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார். இவர் பின்னர் வழக்கறிஞராக மாறினார்.
வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின் போது ராஜாஜி கைதான பிறகு அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார். அப்போது “புளியமர விளாரால்’ அய்யரை ஆங்கிலேயர் தாக்கினர். மற்றும் வைத்தியநாதையரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்து உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.
இவர் கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு இயக்கம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆங்கிலேயரால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலதடவை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். வைத்தியநாத ஐயர் விடுதலைப் போராட்டத்திற்கான செலவிற்காகத் தனது மனைவியின் நகைகளையும், வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும், விற்றும் பணம் அளித்தவர் ஆவார். நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.
தமிழ்நாட்டின் மறக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவர் எனலாம்.ஹரிஜனங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். தியாகி ‘கக்கன்’ இவருடைய சீடர். 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தலைவர். இவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்..
1939 ஜூலை 8 அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை நடத்திக்காட்டியவர்( பசும்பொன் தேவர் ஆதரவுடன் ) மதுரை வைத்யனாதய்யர். இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசும் பலரும் பிராமணர்களுக்கெதிரான வசைகளையே முன்னிறுத்தி பேசுவார்கள். அதே தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்ட மக்களை ஆலங்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தி அதற்குத் தலைமை தாங்கியவர் இந்தப் பிராமணர் என்பதை எங்குமே பேசமாட்டார்கள்.
ஆனால் பாருங்க தமிழகத்தில் ஒரு கோவில் உள்ளே கூட நுழையாத அதுவும் வைக்கத்தில் யாரோ போராடியதற்க்கு இவர் பெயர் வாங்கிய ராமசாமியை தூக்கி வைத்து கொண்டாடுபவர்கள் மதுரை வைத்தியநாதய்யரை மறந்துவிடுவதை..
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றியும் பார்ப்போம். ‘
பாம்பைக் கண்டால் விடு பாப்பானைக் கண்டால் அடி’ என்று துவேஷப் பிரச்சாரம் செய்தும், பிராமணர்களை எதிர்த்தும் அவமதித்தும் பேசிவந்த ராமசாமி நாயக்கர் பிராமணராலேயே காப்பற்றப்பட்ட சம்பவத்தைப் பார்க்கலாம்.
1946 ம் ஆண்டு வைகை வடகரையில் தி.க மாநாடு நடந்தது. தி.க தொண்டர்கள் மீனாட்சி கோயிலுக்கு சென்று கிண்டலும் கேலியும் செய்துள்ளனர். மதுரை மக்கள் தி.க தொண்டர்களை விரட்டி, மாநாட்டுப் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். ஷெனாய் நகரில் இருந்த ஈ.வே.ரா வை மக்கள் சூழ்ந்து விட்டனர். போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதனைக் கேள்விப்பட்ட வைத்தியநாத ஐயர் அங்கு சென்று மக்களை அமைதிப்படுத்தி ஈ வெ ரா உட்பட அனைவரையும் ஊருக்கு பத்திரமாக அனுப்பினார்.
ஆக பிராமணரை அடி என்று கூறிய ராமசாமி நாயக்கருக்கு பிராமணரான வைத்தியநாத ஐயர் பாதுகாப்பளித்த சம்பவம் இன்றும் அழியாத வரலாறாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என வெட்கமில்லாமல் திரியிம் திராவிடக்காரர்கள் இந்தச் சம்பவங்களை வஞ்சகமாக மறைத்து ராமசாமி நாயக்கருக்கு குருட்டுத்தனமான பக்தர்கள் உருவாகப் பெரிதும் பாடுபட்டனர்.
மதுரை வைத்தியநாத ஐயர் தான் இறக்கும் வரை (1955) ஹரிஜன சேவா சங்கத் தலைவராக இருந்தார். ஹரிஜன சேவா சங்கம் இவரைப் பாராட்டி ஹரிஜனங்களின் தந்தை என்று அழைத்தனர்.
சுதந்திரப் போராட்டத் தியாகியை ஹரிஜனங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட பின்னர் வஞ்சகமாக மறக்கடிக்கப்பட்ட இந்த மாமனிதரை நெஞ்சினில் நிறுத்திடுவோம்..

Comments

  1. Raj Tupil

    Good one. Very informative. I didn’t know about the incident of Iyer saving EVR.

    • Srirangam Ramesh

      These facts are not spoken about in the public. Sad to see the vindictive politics playing.

Leave a Reply to Raj Tupil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *