திருவானைக் காவல் தாயே

திருவானைக் காவல் தாயே
0Shares

 

திருவானைக் காவல் தாயே

 

பல்லவி
திருவானைக் காவல் தாயே , அகிலம் ஆளும் அன்னை நீயே
தீராத துன்பம் எல்லாம் தீர்த்து எம்மை காத்திடுவாயே
மறைமொழிக்கு மகனென்றொன்று
தமிழ்மொழிக்கு மகன் ஒன்றென்று
இருவரோடு எமையும் பெற்றெடுத்தாயே,காத்திடுவாயே


(திருவானைக் காவல் தாயே….)

சரணம் 1
காதோரம் பாடும் பாட்டில் எம் துன்பங்கள் கேள், துயரங்கள் கேள்
மாறாமல் எங்கள் நெஞ்சம் போற்றிப்பாடும் உன்துதியும் கேள்
மேலான அன்னை தந்தை நலம்கேட்டு பாடும் பாட்டில்
போராடும் பிள்ளைகள் கல்வி நலம் கோரும் வரிகளையும் கேள்
யாரோடும் உறவு சிறக்க ,ஊரோடு பெருமை வளர்க்க
தாயே உன் கருணை வேண்டி பாடும் பாட்டின் நற்பொருளை கேள்

(திருவானைக் காவல் தாயே….)


சரணம் 2
தாளாத துன்பம் போக்கி இன்பம் எல்லாம் தருவாய் தாயே
ஞானமும் கல்வியும் செல்வமும் சீராக தந்தருள்வாயே
பார்போற்றும் கலைகள் எல்லாம் அம்மா நீ அருளிடவேணும்
நோயில்லா நல்லருள் வாழ்வும் தாயே நீ தந்திடவேணும்
தாயில்லா பிள்ளை யாரும் இல்லை தாய் நீயே தாயே
வாழ்நாளில் எல்லாம் என்றும் நீ துணையாக நின்றிடுவாயே

(திருவானைக் காவல் தாயே….)

 

Note: தாடங்க யுகளீ – அதனால் ‘கேள் ‘ என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது.

_____ ஸ்ரீரங்கம் ரமேஷ்

Comments

  1. H B Murali

    அம்பாளின் பூரண அருள் உங்களுக்கு உண்டு. தாயில்லா பிள்ளை யாரும் இல்லை தாய் நீயே தாயே என்ற வரி அம்பாளிடம் நமக்கு ‌உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது சபாஷ்

    • Srirangam Ramesh

      Ammavaru Jaganmatha.

Leave a Reply to H B Murali Cancel reply

Your email address will not be published. Required fields are marked *