‘Tune clone’- புருஷோத்தமா (Brovabarama , Thyagaraja Krithi)

‘Tune clone’- புருஷோத்தமா  (Brovabarama , Thyagaraja Krithi)
0Shares
Clone the tune of the Song: Brovabarama , Thyagaraja Krithi
Rag: Bahudhari , Thalam : Adi
(This is not a translation of the original krithi. This is only a ‘Tune clone’)
புருஷோத்தமா ரகுராமா , பாடல்: ஸ்ரீரங்கம் ரமேஷ்
பல்லவி
புருஷோத்தமா ரகுராமா
பரதனுக்கு தேசம் தந்து வனவாசம் விரைந்த
(புருஷோத்தமா ரகுராமா )
அனுபல்லவி
வனவேந்தன் குகனை தனயன் என்று கொண்டாய்
இணையான இளவல் அங்கதன் என்று சொன்னாய்
(புருஷோத்தமா ரகுராமா )
சரணம்
கல்லாய் நின்ற பெண்ணை பெண்ணாய் மாற்றினாய்
சொல்லும் வில்லும் இல்லும் மாறாத வீரனே
நில்லாமல் காடளந்தும் தர்மம் காத்த ராமா
வில்விழியால் வென்றவளை வில்லாலே வென்றவனே
(புருஷோத்தமா ரகுராமா )
–ஸ்ரீரங்கம் ரமேஷ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *