பிறப்பால் அனைவரும் சமம்

0Shares
பிறப்பால் அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது
இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்லப்படுகிறது
பிராமணன்
தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று!
இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் பொய்யை பல முறை அதை உண்மை போல் உளருகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன?
புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:‘
“பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”
என்று புருஷ சூக்தத்திலும் உள்ளது. இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்,
பிராமனணுக்கு முகமே பலம்.
வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்கவேண்டும். மேலும் வாயால் நல்லாசி வழங்கவும். நல் உபதேசம் செய்யவும், நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை. எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. (பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.)
சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.
சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும், வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. (ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு.)
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன். எனவே வியாபாரம் செய்யவும், கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம்மிக்கதாக விளங்க வேண்டும்.( வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு.)
சூத்திரன் உழவு செய்பவன். உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.(சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.)
மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை! என்பதே உண்மை.
இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.
மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது?
வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.
பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,
“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,
தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).
இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனா – பிறப்பால்;
ஜாயதே – பிறந்த அனைவரும்;
சூத்ர – சூத்திரரே;
கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக;
ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.
செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
இதையே திருவள்ளுவர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பொருள்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு (குணம்/character/வர்ணம்) ஒத்திருப்பதில்லை.
இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள், சமஸ்கிருதச் சுலோகங்களுக்குத் தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகின்றனர்
நாத்திகவாதிகளால்காலம் காலமாக திரித்து சொல்லிவருவது நினைவில் கொள்க…
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *