நல்ல தமிழில் எழுத வேண்டுமா?
சொல்லுதல்: சுருக்கமாய்க் கூறுதல்
பேசுதல்: நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல்: கூறுபடுத்திச் சொல்லுதல்.
சாற்றுதல்: பலரறியக் கூறல்.
பன்னுதல்: திரும்பத் திரும்பச் சொல்லுதல்
கொஞ்சுதல்: செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல்: பித்தனைப் போல் சொல்லுதல்.
ஓதுதல்: காதில் மெல்லச் சொல்லுதல்.
உளறுதல்: ஒன்றுக்கொன்று மாற்றி சொல்லுதல்.
கழற்றுதல்: கடிந்து சொல்லுதல்
விளம்புதல்: பலர் அறியச் சொல்லுதல்.
செப்புதல்: விடை சொல்லுதல்.
மொழிதல்: திருத்தமாகச் சொல்லுதல்.
இயம்புதல்: இனிமையாகக் கூறல்.
வற்புறுத்தல்: அழுத்தமாகக் கூறல்.
– அ.கி.பரந்தாமனார் எழுதிய “நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ நூலிலிருந்து