சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!

0Shares

கோவிந்தன் என்ற பெயருடைய, பெரியவர் ஒருவர், கோவில்கள் நிறைந்த அந்த அழகான ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் கிருஷ்ணபகவானின் சிறந்த பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் அழகிய படம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும், கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு, அந்தப் படத்தையும், அதாவது கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம், பத்தி ஏற்றுவார்.

அவருக்கு ஒரு மகனும் கூட உண்டு. அவன் பெயர் ஹரி. மகன் ஹரி தனது படிப்பை முடித்துக் கொண்டு விட்டான். இப்போது தந்தையுடன் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவனுடைய அப்பா பக்தியுடன் செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான். அவன் இந்த (கலி) காலத்தில், படித்த ஒரு இளம் வாலிபன். ஹரி தன் அப்பாவிடம் விவரித்து கூறினான். அதாவது கடவுள் என்று ஏதும் கிடையாது. இது எல்லாம் ஒரு மாயை. மனதின் மாயை. அதாவது (கடவுள்) இல்லாத ஒன்றாகும்.

சூரிய பகவான் தன்னுடைய ரதத்தில் உலகத்தையே சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்று மறை நூல்கள் சொல்கின்றன. அதே நேரத்தில் அறிவியல் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது ……….. இந்த வகையான அறிவியலின் புதிய எடுத்துக் காட்டுகளைக் கூறி தினமும், கடவுள் இல்லை என்று நிரூபித்துக் காட்டுவதற்கு தந்தையிடம் முயற்சி செய்வான்.

அந்த அப்பாவானவர், அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டு, வெறுமனே புன்சிரிப்பை சிந்துவார். இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாடவோ அல்லது விவாதம் பண்ணவோ, அவர் விரும்பவில்லை.

காலம் கடந்து சென்றது. அந்த அப்பாவுக்கும் வயதாகி விட்டது. இப்போது தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

ஆகவே, ஒரு நாள் அவர், அவருடைய மகனிடம் கூறினார், “மகனே, நீ கடவுளை நம்புகிறாயோ, இல்லையோ, எனக்கு நீ நன்றாக வாழ்ந்தால் போதுமானது, அதாவது நீ கடினமான ஒரு உழைப்பாளி, இரக்கமானவன், மேலும் நேர்மையானவன். ஆனால், நான் கடைசியாக சொல்லும் இந்த ஒன்றை மட்டும் கேட்பாயா?, எனக்குக் கீழ்ப்படிவாயா?”

அந்த மகன் கூறினான், “உறுதியாகச் செய்வேன், அப்பா; நான் நிச்சயம் சம்மதிக்கிறேன். “

அப்பா கூறினார், “ மகனே, என்னுடைய மரணத்திற்குப் பிறகு, கடையில் இருக்கும் கிருஷ்ண பகவான் கடவுளின் படத்தை தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். ஏதாவது கஷ்டத்தில் நீ எப்போதாவது சிக்கிக் கொண்டால், பிறகு உன் கையை குவித்து உன்னுடைய பிரச்சனையை ஸ்ரீகிருஷணரிடம் கூறு. நான் கூறியது போல் இதை மட்டும் சற்றே செய்து விடு. “ அந்த மகனும் அதற்கு சம்மதித்தான்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த அப்பாவும் இறந்து போய் விட்டார். காலமும் கடந்து கொண்டே இருந்தது..

ஒரு நாள் இரவு கன மழை பெய்து கொண்டிருந்தது. ஹரி காலையிலிருந்து வியாபாரத்தை கவனித்து வந்தான். இரவு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மின்சாரம் வேறு நின்று போய்.., இருட்டு கஷ்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று முழுவதும் சொட்ட சொட்ட நனைந்து கொண்டே ஒரு பையன் ஓடி வந்தான், கூறினான், “ அண்ணா, எனக்கு இந்த மருந்து தேவைப்படுகிறது. என் அம்மா மிகவும் சுகவீனமாக இருக்கிறாள். இந்த மருந்தில் நான்கு ஸ்பூன்கள் உடனடியாக கொடுத்தாக வேண்டும்; அதன் பிறகுதான், உன் அம்மாவைக் காப்பாற்றிட முடியும் என்று டாக்டர் கூறி விட்டார் ….. இந்த மருந்து உங்களிடம் இருக்கிறதா?
ஹரி மருந்து சீட்டைப் பார்த்து விட்டு, உடனே கூறினான், “ ஆம், என்னிடம் இது இருக்கிறது.” அந்தப் பையன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். வாங்கிக் கொண்டு சீக்கிரமே மருந்துடன் கிளம்பினான்.

ஆனால், இது என்னவாக ஆயிற்று ! அந்தப் பையன் கிளம்பிய உடனே, ஹரி மருந்து கவுண்டரைப் பார்த்தான்; அவன் வியர்த்து, விறுவிறுத்துப் போனான் …….. ஒரு வாடிக்கையாளர் சிறிது நேரத்துக்கு முன்புதான் ஒரு பாட்டில் எலி விஷத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றிருந்தார். கரண்ட் இல்லாமல் இருந்ததால், ஹரி லைட் வந்த பிறகு, அதனை சரியான இடத்தில் வைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டே அதை கவுண்டரில் வைத்து விட்டான். ஆனால் சிறுவன், இந்த மருந்து பாட்டிலுக்குப் பதிலாக எலி விஷம் இருந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சென்று விட்டான். அவனுக்கு படிக்கவும் கூட தெரியாது.

“ஓ கடவுளே. ! இந்த சொற்கள், தானாகவே, ஹரியின் வாயிலிருந்து வெளியே வந்தன. இது என்ன பேரழிவு. ! “ பிறகு அவனுக்கு அவனுடைய அப்பாவின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. உடனே, கைகளை குவித்து, கிருஷ்ண பகவான் படத்தின் முன்னே சென்று, கனத்த இதயத்தோடு, பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.

“சுவாமி அப்பா, எப்போதும் வழக்கமாக கூறுவார், அதாவது நீங்கள் இருக்கிறீர்கள் (கடவுள் இருக்கிறார்) என்று. நீங்கள் அங்கே இருப்பது உண்மை என்றால், இப்போது தயவு செய்து இன்று நடக்கும் இந்த விரும்பத்தகாத நிகழ்வை நடக்க விடாமல் செய்து விடுங்கள். தன் மகனின் கைகளில் விஷத்தைப் பெற்று ஒரு அம்மா குடிப்பதை.. ….பகவானே, எப்படியாவது நீ, அவள் விஷத்தை குடிக்க விடாமல் செய்து விடுங்கள். !

“அண்ணா.! “ அந்த நேரத்தில் ஒரு குரல் பின்னால் இருந்து கேட்டது. “அண்ணா, தெரியாமல் சேற்றில் கால் வைத்து நான் வழுக்கி விழுந்து விட்டேன், அந்த மருந்து பாட்டிலும் கூட உடைந்து போய் விட்டது.! தயவு செய்து வேறு ஒரு மருந்து பாட்டில் தாருங்கள்.”

“தெய்வீக புன்னகையுடன் தோற்றமளிக்கும் கடவுளை அந்தப் படத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஹரியின் முகத்தில் கண்ணீர் பாய்ந்தோட தொடங்கியது.!

அப்போதே, ஒரு நம்பிக்கை அவனுள் விழித்தெழுந்தது. அதாவது அங்கே யாரோ ஒருவர் இருக்கறார்; அவர்தான் இந்த பிரபஞ்சத்தையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார் …… சிலர் அவரைக் கடவுள் என்று அழைக்கிறார்கள்; சிலர் அவரை ஈடு இணையற்றவர் என்று அழைக்கிறார்கள்; சிலர் அவரை எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், மேலும் சிலர் தெய்வீக சக்தி என்றும் கூறுகிறார்கள்.

அன்பும் பக்தியும் நிறைந்த இதயத்தோடு செய்யப்படும் பிரார்த்தனையானது, ஒரு போதும் கேட்கப்படாமல் போகாது. (கேட்டதை கொடுப்பவனே ஸ்ரீகிருஷ்ணன்)

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!
ஓம் நமோ நாராயணா..!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *