* குரு ப்ரீதி *

* குரு ப்ரீதி *
0Shares
டாக்டர் சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்த சமயம்..
அரசு முறை பயணமாக ‘மஸ்கட்’டுக்கு செல்கிறார்..
அந்த நாட்டின் மரபை மீறி அரசரே விமான நிலையம் வந்து அவரை வரவேற்க காத்திருகிறார்..
விமானம் நின்று படிகள் இணைக்கப் பட சர்மா அவர்கள் வெளிப்படுகிறார்..
அவரைக் கண்டதும் அரசர் படியில் ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அளவளாவிக் கொண்டு இறங்கி வருகிறார்..
இது அந்நாட்டு அதிகாரிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொஞ்சம் அதிகப்படியாகவே தோன்றுகிறது..
எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அரசர் ஆயிற்றே..
ஆயிற்று..
அரசு சார்ந்த காரியங்கள் அனைத்தும் முடிந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிக்கையாளர்களைச் சந்திப்பு நடைபெறுகிறது…
சம்பிரதாய கேள்விகள் முடிந்து அந்த நாட்டு பத்திரிகை நிருபர்
அந்த கேள்வியை அரசரின் வைக்கிறார்..
“இதுநாள் வரை எத்தனையோ நாட்டின் உயர் தலைவர்கள் வந்த போதும் நேரில் வராத அரசர் ஒரு ஜனாதிபதியை வரவேற்க ஏன் மரபை மீறி வரவேண்டும், அப்படி என்ன அவர் சிறப்பு”.???
அங்கே ஒரு சிறு சலசலப்பு..
அரசர் பதிலளிக்கிறார்,
” நான் இப்போது அரசனாக இருக்கலாம்,
அவர் ஜனாதிபதியாக இருக்கலாம்,
ஆனால் நான் இந்தியாவில் பூனா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எனக்கு கல்வி போதித்த ஆசான் அவர்..
வெறுமனே கல்வி போதித்தலையும் தாண்டி அந்நாட்டின் கலாச்சார பண்பாடுகளைப் பற்றிய தெளிவான பார்வையை எனக்கு கொடுத்தவர்..
இன்றளவும் நான் ஓரளவு பண்பானவனாக இருப்பதாக நினைப்பதற்கு அவரின் தோழமையான வழிகாட்டுதலும் ஒரு காரணம்”..
“இந்திய மண்ணில் கல்வி போதிக்கும் ஆசிரியரை கடவுளுக்கு நிகராக போற்றுகிற பண்பாடு கொண்டவர்கள் அவர்கள்..
கொஞ்சம் காலம் நானும் அந்த மண்ணில் இருந்தவனில்லையா..?
அந்த பண்பாடு எனக்கும் வருவதில் ஆச்சரியம் என்ன இருக்கப் போகிறது”..
என பெருமையாக குறிப்பிடுகிறார்..
சர்மா அவர்களுக்கு பூரிப்பாக இருக்கிறது, ஒரு அன்னிய தேச மாணவனுக்கு சிறப்பான பண்பை போதித்த ஆசிரியராக நெகிழ்வில் அவர் குழைந்து போகிறார்..
உள்ளுக்குள் இந்த ஸ்லோகம் ஒலிக்கிறது அவருக்கு…
“குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹா
குரு சாட்சாத் பரப்பிரம்மம்
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ”..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *