இதோ ராதை பாடுவதுபோல் ஒரு பாட்டு – ஸ்ரீரங்கம் ரமேஷ் எழுதியது ..
ராகம் : மோஹனம்
பல்லவி
கண்ணா …ஒரு கள்வன் நீயோ
வெண்ணைபோல் என்னை திருடவந்தாயோ
குழலாலே என்னை கட்டி
இசையாலே என்னை சுத்தி
சுத்தி சுத்தி வந்து, மயங்கவைத்தாயோ
சரணம் 1
யாரோடு யாரானாலும்
என்னோடு நீதான் கண்ணா
சொல்லாமல் சொல்லும் காதல்
என்னுள்ளம் கேட்டது உன்னால்
பொய்யென்றும் நின்றாய் நீயே
புகழென்றும் நின்றாய் நீயே
மெய் உந்தன் காதல் மட்டும்
மெல்ல என் இதயம் தட்டும் …………..கண்ணா ..
சரணம் 2
நினைவெல்லாம் நீயே கண்ணா
இரவிலே கருமை நீயே
நீங்காத நீல நிறத்தில்
ஏங்காத பெண்களுண்டோ
தாங்காத காதல் கொண்டேன்
தயங்காமல் தாவி வருவாய்
தூங்காத கண்கள் தடவி
கனவெல்லாம் அருகிலிருப்பாய் ………கண்ணா ..