Clone the tune of the Song : Neethu Charanamule ,,Thyagaraja Krithi
Rag: Simmendra madhyamam Thalam : Adi
(This is not a translation of the original krithi. This is only a ‘Tune clone’)
நின்னை சரணடைந்தேன் – பாடல் : ஸ்ரீரங்கம் ரமேஷ்
பல்லவி
நின்னை சரணடைந்தேன்
ராமா நின்னை சரணடைந்தேன்
கதியென நம்பி நின் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
வேதவேதங்கள் ஏதும் அறியேன்
பாதக வினைகள் நீக்கும் நின் நாமம் அறிவேன்
(ராமா நின்னை சரணடைந்தேன்)
சரணம்
ராம ராம ராம என்னும்
தேமதுரநாம மந்திரம் ஜபித்து
பக்தியாலே பாமாலை சூட்டும்
ராம பக்தனுக்கருள்வாய் ராமச்சந்திரா
( நின்னை சரணடைந்தேன்)