திருநெல்வேலி தமிழ்

திருநெல்வேலி தமிழ்
0Shares
திருநெல்வேலி தமிழ்
திருநெல்வேலி பக்கம் “பைய” என்ற
வார்த்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள்,
கேட்டு இருக்கறீர்களா ? அந்த
சொல்லுக்கு “மெதுவாக” என்று பொருள் .
சைக்கிள்
எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால்
அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் வரும் ,
“ஏல பைய போயிட்டு வா என்னா”
திருவள்ளுவர் காமத்துபாலில் ஒரு குறளில் பைய என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக
சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர்
சொல்கிறார்
“அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.”
இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக
சிரிக்கிறாள் என்பதை “பைய நகும்” என்கிறார்
வள்ளுவர்.
அட, 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர்
பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம்
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்று வியந்தேன்.
தமிழ் பிறந்த இடம் பொதிகை தானோ,
திருநெல்வேலி மக்கள் வார்த்தைகளில் இன்னும்
ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பெருமைப்படுகிறேன் அந்த தமிழ் கற்றதர்காக திருநெல்வேலி:
வரலாறு:
கி.பி.1790 செப்டம்பர் 1ல் இம்மாவட்டம் ஆங்கிலோயரால் உருவாக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராகச் சிறிது காலம் இருந்தது.
நெல்லை தமிழ்:
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை ‘அண்ணாச்சி’ என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
சொற்கள்:
• அண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
• ஆச்சி : வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
• பைதா – சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
• கொண்டி – தாழ்ப்பாள்
• பைய – மெதுவாக
• சாரம் – லுங்கி
• கோட்டி – மனநிலை சரியில்லாதவர்.
• வளவு – முடுக்கு,சந்து
• வேசடை – தொந்தரவு
• சிறை – தொந்தரவு
• சேக்காளி – நண்பன்
• தொரவா – சாவி
• மச்சி – மாடி
• கொடை – திருவிழா
• கசம் – ஆழமான பகுதி
• ஆக்கங்கெட்டது – not cconstructive (a bad omen)
• துஷ்டி – எழவு (funeral)
• சவுட்டு – குறைந்த
• கிடா – பெரிய ஆடு (male)
• செத்த நேரம் – கொஞ்ச நேரம்
• குறுக்க சாய்த்தல் – படுத்தல்
• பூடம் – பலி பீடம்
• அந்தானி – அப்பொழுது
• வாரியல் – துடைப்பம்
• கூவை – ஆந்தை an owl (bird of bad omen)
• இடும்பு – திமிறு (arrogance)
• சீக்கு – நோய்
• சீனி – சர்க்கரை (Sugar)
• ஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 செண்ட் நிலம்
• நொம்பலம் – வலி
• கொட்டாரம் – அரண்மனை
• திட்டு – மேடு
• சிரிப்பாணி – சிரிப்பு
• திரியாவரம் – குசும்புத்தனம்
• பாட்டம் – குத்தகை
• பொறத்தால – பின்னாலே
• மாப்பு – மன்னிப்பு
• ராத்தல் – அரை கிலோ
• சோலி – வேலை
• சங்கு – கழுத்து
• செவி – காது
• மண்டை – தலை
• செவிடு – கன்னம்
• சாவி – மணியில்லாத நெல், பதர்
• மூடு – மரத்து அடி
• குறுக்கு – முதுகு
• வெக்க – சூடு, அனல் காற்று
• வேக்காடு – வியர்வை
அழகு தமிழ் நம்மிடம் தான் உள்ளது…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *