அவதாரமும் அறிவியலும்…
உயிரியல் விஞ்ஞானி திரு.சார்ல்ஸ் டார்வின் அவர்கள் 1859 ஆண்டு Orgin Of Species என்ற நூலை வெளியிட்டார். அதில் முதல் உயிரி கடலில் இருந்து தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இக்கருத்தை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே விளக்கியுள்ளனர். திருமாலின் அவதாரங்களை கவனித்தால் புரியும்..
1.மச்ச அவதாரம்(முதல் உயிர் கடலில் தோன்றியது)
2.கூர்ம அவதாரம்(நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள் தோன்றின)
3.வராக அவதாரம்(நிலத்தில் மட்டும் வாழும் உயிர்கள் தோன்றின)
4.நரசிம்ம அவதாரம் (மனித உருவும், மிருக அறிவும் படைத்த ஆதிமனிதன்)
5.வாமண அவதாரம்(வளர்ச்சி அடையாத ஆனால் முழுமைப் பெற்ற மனித உயிர்)
6.பரசுராம அவதாரம்(முழுமைப் பெற்ற, வளர்ச்சியடைந்த ஆனால் கோபக் கணலோடு கூடிய மனிதன்)
7,ராம அவதாரம்(பூரணத்துவம் அடைந்த அடக்கத்துடன் கூடிய மனிதன்)
8,பலராமர் அவதாரம்(பெருமையும் கீர்த்தியும் இருந்தும் அதை பறைசாற்றாத குணாதிசயம்)
9.கிருஷ்ண அவதாரம்(பூரணத்துவம் நிறைந்த, மதிநுட்பம் மிகுந்த, தத்வார்த்தமாகியம் குணாதிசயம்)
10.கல்கி அவதாரம்(கடவுள் மறுப்பாளர்களையும், கபட வேஷதாரிகளையும்,அழிக்க வரப் போகும் அவதாரம்)
இதில் நரசிம்ம அவதாரம் வரை உயிரின் தோற்றம் என்ற அறிவியல் கருத்தும், எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்ற தத்துவார்த்த கருத்தையும் வலியுறுத்துகின்றது.வாமண அவதாரத்தில் இருந்து ஏனைய மற்ற அவதாரங்கள் மனித பரிணாம வளர்ச்சியும் குணாதிசயத்தையும் விளக்குகின்றது..வாமண அவதாரம் உடற்குறையுடைய மாற்றுதிறனாளிகளும் இறைவன் படைப்பே, அவரையும் ஏற்று உதவி செய்யும் குணம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது…