கல்லாக மரமாக காய்த்தவர் தம்மையும்
கனியாக மாற்றும் அருளே
கந்தல் உடைகட்டி அம்மா என்பார் வாழ்விலே
கடலாக பொங்கும் அருளே
சொல்லோடு பொருளோடு சுவையோடு விளையாடச்
சுகமாக வந்த தமிழே
தொடைமீது குருநாதன் தனை வைதீச்வரனுக்கும்
சுடராக நிற்கும் அமுதே
கல்லார்க்கும் கற்றார்க்கும் காணார்க்கும் கண்டார்க்கும்
கரையேற்றம் நல்கும் கலையே
கல்யாணம் இல்லாத கன்னிப் பெண் கண்ணீரைக்
காலத்தில் நீக்கும் சிலையே
எல்லார்க்கும் எல்லோமும் எப்போதும் தருகின்ற
ஏகாம்பரன் தேவியே
எழில்பொழியும் காஞ்சிநகர் அரசு புரி ராணியே
ஏதில் காமாட்சி உமையே!
– கண்ணதாசன் .