லகரம் ,ழகரம் ,ளகரம் பயிற்சி வேண்டுமா ?
வாய் விட்டுப் படியுங்கள் இந்தப் பாடலை ! — ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் அருளிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.
உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே
உருகு மடிய ரிதய நெகிழ வுணர்வி லெழுந லுதயமே
கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
அலகில் புவன முடியும் வெளியி லளியு மொளியி னிலயமே
அறிவு ளறிவை யறியு மவரு மறிய வரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே
வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே !