கடவுளால் மட்டுமே முடியும்

கடவுளால் மட்டுமே முடியும்
0Shares
கடவுளால் மட்டுமே முடியும்
ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.
“அர்ஜுனா,அது புறா தானே.?” என்று கேட்டார் கிருஷ்ணர்.
” ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!” என்றான் அர்ஜுனன்.
சில விநாடிகளுக்குப் பிறகு,
“பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!” என்றார் கிருஷ்ணர்.
அடுத்த விநாடியே,”ஆமாம்…..ஆமாம் …அது பருந்து தான்.!”
என்று சொன்னான் அர்ஜுனன்.
மேலும் சில விநாடிகள் கழித்து
“அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!”
கிருஷ்ணர் சொல்ல,
கொஞ்சமும் தாமதிக்காமல் ,” தாங்கள் சொல்வது சரிதான்…அது கிளி தான் .!” என பதிலளித்தான் அர்ஜுனன்.
இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
“அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.
அது ஒரு காகம்.!” கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.
“நிஜம் தான் கிருஷ்ணா…அது
காகமே தான்…சந்தேகமே இல்லை.!”
பதிலளித்தான் அர்ஜுனன்.
” என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?”
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
“கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ, புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.
அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?” அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.
இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.
கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *