ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு
// சிலரது தவறுக்கு மொத்த சமூகமும் பொறுப்பேற்க முடியாது – //
படத்தில் இருப்பவர் சாமிநாத குருக்கள் –
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – ஹரிஜன ஆலய ப்ரவேசத்தின் போது – அதை ஆதரித்து – அவர்களும் பக்தர்களே என சொல்லி தீண்டாமையை காலில் போட்டு மிதித்த பகுத்தறிவாளர்.
இந்த செயலுக்காக அவர் சார்ந்த சமூகத்தின் மூலமாகவே அனுபவித்த கொடுமைகள் ஏராளம்.
அவரை அடித்தார்கள், மாட்டு சாணத்தை கரைத்து மேலே ஊற்றினார்கள் – அவர் குடும்பத்தையே சமூகத்திலிருந்து தள்ளி வைத்தார்கள். ஒரு நாள் கஷ்டம் தாங்க முடியாம அவரது மகன் அவரிடம் – “ஏம்பா, மத்தவங்க மாதிரி நீயும் இருந்திருக்கலாமேன்னு கேட்டாராம். அதுக்கு அவர், ஹரிஜனும் பக்தன்தானே. அவர்கள் உள்ளே வந்து வழிபடுவது எனக்குத் தப்பாத் தெரியலைன்னு” சொன்னாராம்.
இவரின் இந்த குணத்தை பாராட்ட – அப்போதைய கவர்னர் ராஜாஜி இவரின் வீட்டுக்கு சென்றாராம் –
இவரின் குடும்பத்தார் – ராஜாஜியிடம் உன்னுடைய மகன்களுக்கு வேலை வாங்கித் தரும்படி கேள் என்றனராம் –
அதற்கு அவர் “என் மகன்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைத்தால் போதும் என்று சொல்லி விட்டாராம்”
இதை இப்பொழுது பதிவிடும் நோக்கம் – ப்ராமணர்களிலும் தீண்டாமையை வெகு தீவிரமாக எதிர்த்தவர்கள் உண்டு எங்கள் குடும்பம் உட்பட –
சிலரது தவறுக்கு மொத்த சமூகமும் பொறுப்பேற்க முடியாது – அப்படி பொறுப்பேற்க வேண்டுமானால் –
அனைத்து மதங்களிலும் ஒவ்வொரு கால கட்டத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கு செய்தவர் உண்டு –
அவர்களும் அவர்கள் சார்ந்த மதங்களும் கண்டனத்துக்கு உரியதே !!