பிரித்து எழுதுதல்
தமிழில் எந்த எந்த வார்த்தைகளை சேர்த்து எழுத வேண்டும், சேர்த்து எழுதக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எழுதும் போது
நான் தான்
வந்து கொண்டு
மேல் சொன்ன இந்த வார்த்தைகளை சேர்த்துதான் எழுத வேண்டும்.
அதே போல சிலவற்றுக்கு இடையே ஒற்று வரவேண்டும். சிலவற்றுக்கு ஒற்று வரக்கூடாது.
வர கூடாது – வரக் கூடாது – க் வர வேண்டும்
அறிந்துக் கொண்டார் – க் கூடாது
சிலவற்றை பிரித்துதான் எழுத வேண்டும். சேர்த்து எழுதினால் அர்த்தம் மாறுபடும்.
அறிவில் ஆதவன்
அறிவில்லாதவன்
மேல் சொன்ன இரண்டும் ஒன்றுதான். ஆனால் ஒன்று இல்லை.
(உடைத்த கடலை சுவை தரும். சமயத்தில் உடைத்த தமிழ் சுவை தராது)