ராமாயணத்தில் புஷ்பக விமானத்தில் சீதாதேவியை ராவணன் நாசிக் அருகே பஞ்சவடி என்ற இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இலங்கைக்கு தூக்கிச்சென்றபோது …..
ஹம்பி ( கர்நாடகா ) , லெப்பாக்ஷி ( ஆந்திரா ) வழியாக தன் தலைநகரை அடைந்தான் ….
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் Nasik, Hampi, Lepaxi and SriLanka இன்றய வான்வழி ( விமான வழித்தடம் போல் ) நேர் கோட்டில் இருக்கிறது.
தங்கள் வனவாச காலத்தில் நாசிக் அருகில் இருந்த பஞ்சவடி என்ற இடத்தில் ராமர், லெட்சுமணன், சீதை இருந்தனர்.
அங்கு அவர்கள் இருந்த காலத்தில் தன்னை மணக்கச்சொன்ன சூர்ப்பனகை மூக்கை வெட்டிவிடுகிறான் லெட்சுமணன்.
அதன் காரணமாக நாசிக் ( ஹிந்தியில் நாக் என்றால் மூக்கு ) என்று அந்த ஊர் பெயர் வர காரணமானது .
ரிஷ்யாமுக் பர்வதம் ( Hampi அருகில் ) ஹனுமன் மற்றும் அவரது வானர கூட்டாளிகள் கூட்டமாக இருந்ததை பார்த்த சீதை தனது நகைகளை கழற்றி துணியில் சுற்றி எரிகிறாள்.
இதைத்தான் கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக வர்ணித்திருப்பார் ….
” அணியும் வகை தெரியாமல் வானரங்கள் இடுப்பிற்கு உள்ளதை ( ஒட்டியாணம் ) கழுத்துக்கும் ….
எழில் கழுத்துக்கு உரியதை இடுப்புக்கும் …
காதுக்கு அணியவேண்டியதை மூக்கிற்கும் …
மூக்கில் அணியும் மூக்குத்தியை காதுக்கும் மாட்டிக்கொண்டு அலைந்தன என்று …..
அடுத்ததாக பறவை அரசன் ஜடாயு ராவணனுடன் நடுவானில் போரிட்டு ராவணனின் வாளுக்கு இரையாகி கீழே விழுகிறார்.
சீதாதேவி , ” ஹை பக்ஷி ” என்று வருந்தி அழைத்த இடமே இன்றய ஆந்திராவின் லெபக்ஷி என்ற இடம்.
இந்த படத்தை பாருங்கள் …. வால்மீகியால் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறது ….
ராமாயணம் இதிகாசமாக இருந்தாலும் சொல்லப்பட்ட அத்தனையும் உண்மை.