தினம் ஒரு மணி நேரம் – Happy walking

தினம் ஒரு மணி நேரம் – Happy walking
0Shares
40-45 வயதில் ஷுகரோ, BPயோ, கொலஸ்ட்ராலோ தெரிந்தவுடன்தான் நம்மில் பலருக்கு உடம்பு ஆரோக்கியம் பற்றிய திடீர் ஞானோதயம் வரும்..!
அந்த anxietyயில் நாம் செய்யும் தவறுகள் இரண்டு:
ஒன்று ஜிம்..! அடுத்தது, வீட்டில் ட்ரெட்மில்..!
பலரும் முதலில் செய்யும் விஷயம்:
நல்ல ட்ராக் சூட், டிஷர்ட்ஸ், காஸ்ட்லியான ஸ்போர்ட்ஸ் ஷீஸ் வாங்குவது..!
என்னமோ இதையெல்லாம் வாங்கி விட்டால் உடல் ஆரோக்கியம் உடனே திரும்ப கிடைத்து விடும் என்ற எண்ணம்..!
15000 – 20000 கட்டி ஒரு பாப்புலர் ஜிம்மில் சேருவார்கள்..!
முதல் நாள், வீடு அல்லோகலப்பட, மனைவி குழந்தை “என்னடா இது ஆச்சரியம்..!!’ என்று பார்க்க, காலை சீக்கிரம் எழுந்து, ஜம்மென்று புது ட்ராக்சூட், ஷீஸ் எல்லாம் போட்டுக் கொண்டு, ‘பை பை..!’ சொல்லி, ஜிம்முக்கு போவார்கள்..!
அங்கே பல வருடங்களாய் ஜிம்மிங் செய்து கொண்டிருப்பவர்கள், இளைஞர்கள் பலர் பிரமாதமாய் ட்ரெட்மில், மற்ற எக்ஸர்ஸைஸ்கள் செய்வதைப் பார்த்து, வரும் inferiority complexஸில், ‘என்னாலும் முடியும்..!’ என்று ஓவராய் ஏதாவது செய்வார்கள்..!
திரும்ப வரும்போது, பாதி ஆர்னால்ட் ஆகிவிட்டதாக மனதில் தோன்ற, தோள்களை விரித்து, புஜங்களை உடம்பிலிருந்து தள்ளி வைத்துக் கொண்டு நடந்து வருவார்கள்..!
ஆனால், அடுத்த நாள் கால்களை நகர்த்தவே முடியாது..! கை முதுகு தசைகள் எல்லாம் பார்ட் பார்ட்டாய் வலிக்கும்..! கொஞ்ச நாளில் ஜிம் மறக்கப்படும்..!
“எனக்கு டைம் இல்ல…அதான் பிரச்சனை..! பேசாம ஒரு டிரெட்மில் வாங்கிட்டா வீட்லேயே எப்ப வேணா பண்லாம்..!” என்று ஒரு சமாதானம் சொல்லிக் கொண்டு, அடுத்து, 40000 கொடுத்து ட்ரெட்மில் வாங்குவார்கள்..!
ஒரு 15 நாள் அதில் செய்வார்கள்.. அப்புறம் அதுவும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து, 6 மாதம் கழித்து பார்த்தால் மடக்கப்பட்ட அந்த ட்ரெட்மில் ஈரடவல் போடும் ஸ்டாண்டாக மாறியிருக்கும்..!
எல்லோரும் செய்யும் இந்த naive விஷயங்களை நானும் செய்தவன் என்ற முறையில், நண்பர்களுக்கு என் ஆலோசனைகள்:
1. ஜிம் சேராதீர்கள், பணம் வேஸ்ட்..! நாம் இனி ஆர்னால்டாகவோ சில்வஸ்டர் ஸ்டாலானாகவோ மாற வாய்ப்பில்லை..!
2. நமக்கு வேண்டியது: உடம்பு ஆரோக்கியம்.! அதற்கு தேவை: ஜஸ்ட் வாக்கிங்..! அதை தினம் விடாமல் நம்மால் எந்த அளவு செய்ய முடியுமோ அதைச் செய்வது..! அவ்வளவே..!
3. வீட்டிற்குள் ட்ரெட்மில்லில் நடப்பது கொஞ்ச நாட்களில் ஒரு வகையான fatigue உருவாக்குகிறது.. வெளிக்காற்றை சுவாசித்து, இயற்கையை / மனிதர்களை பார்த்தபடி பார்க்கில்/ரோட்டில் நடப்பது அலுப்பைக் குறைக்கும்..!
4. விடாமல், ‘தினம்’ நடப்பதை முதலில் சாத்தியமாக்குங்கள்..! ஆரம்பத்திலேயே, கலோரி கிலோரி, ஸ்பீடு கீடு என்று டார்கெட்டுகளை பேசிக் கொண்டு காம்ப்ளிகேட் செய்து கொள்ளாதீர்கள்..!
5. ட்ராக் சூட், ஷீஸ் என்ற முஸ்தீபுகள் எல்லாம் சும்மா pseudo விஷயங்கள்..! பாண்டோ, ஷார்ட்ஸோ, அட, லுங்கிதான் என்றாலும் மடித்து கட்டிக் கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பி விடுங்கள்..!
நமக்கு அடுத்தவர் பார்வை முக்கியமில்லை; வாக்கிங்தான் முக்கியம்..!
6. அதிகாலை ஐந்து மணிக்கு எழுத்து நடப்பதுதான் வாக்கிங் என்று பெரிய டிஸிப்ளின் எல்லாம் தேவையில்லை..! லேட் காலையோ மாலையோ, எந்த நேரம் முடியுமோ அப்போது நடங்கள்..!
தினம் ஒரு மணி நேரம் வாக்கிங் செய்வது, BPயையும், ஷீகரையும் ஓரளவு கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, நம் உடல் மற்றும் மனதை agileலாக வைத்திருக்கிறது..! அதுதான் நம் தேவை..! Consistencyதான் முக்கியம்..!
That’s all to it..!
ஸ்டார்ட்..!
Happy walking

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *