மங்கலக் கமலச் செல்வீ!
மாலவன் மார்பில் நிற்கும்
மங்கலக் கமலச் செல்வீ!
மரகத மலரில் மொய்க்கும்
மாணிக்கச் சுரும்பு போன்றாய் !
நீலமா மேகம் போல
நிற்கின்ற திருமாலுந்தன்
நேயத்தால் மெய் சிலிர்த்து
நிகரிலாச் செல்வம் கொண்டான்!
மாலவன் மீது வைத்த
மாயப்பொன் விழிஇ ரண்டை
மாதுநீ என்னி டத்தில்
வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன்
கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன்
கண்வைப்பாய் கமலத்தாயே !
— — கண்ணதாசன்