ஸ்ரீரங்கா
பல்லவி
ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே
ஓ ரங்கா- எமை ஆளும் தெய்வமே
பள்ளிகொண்ட உனை பாட வந்தோமே
ஸ்ரீரங்கமாநகர் புரிவாழ் எம் பெருமாளே
சா ரங்கா -எங்கள் அன்பு சுரங்கமே
உன் பாதமலர் பணிந்து போற்றிடுவோமே
அனந்த சயனம் கொண்டு காத்தருள் செய்யும்
ஸ்ரீரங்கமாநகர் புரிவாழ் எம் பெருமாளே ———————(ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே)
சரணம்1
அங்க அழகோடு ஒளிரும் தெய்வமே
ரங்கநாதனே பெரிய பெருமனே
பழகு பைந்தமிழ் போற்றும் தேவனே
தங்க தாமரை உறையும் நெஞ்சமே
ஸ்ரீரங்க நகரிலே அங்கும் இங்குமாய்
வலம் வரும் எம் அன்பு அரசனே – அன்னை
ரெங்கநாயகி சிந்தையில்- பள்ளிகொண்டு
பாற்கடல் ஆளும் எம் பெருமாளே ————————(ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே)
சரணம்2
ரங்கா ரங்கா,என வண்டினங்கள் பாடி
மல்லி மலரிலே தேன் உண்டாட,
அங்கம் வளைத்து தன் தோகை விரித்து,
அசைந்து அசைந்து மயிலினம் ஆட,
தங்கு தடையில்லா,தென் கங்கை நதி உன்தன்
பாதமலர் தொட்டு திரண்டோட
எங்குமில்லா இன்பம் பொங்கும் ஊரிலே,
திருக்கோவில் கொண்ட எம் பெருமாளே ———————–(ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே)
சரணம்3
சந்திர சூரிய விழி கொண்ட அழகுடன்
அன்பர் மனம் குளிர கண்டாயே
சுந்தர முகம் மலர் சிந்தும் புன்னகையில்
கேட்கும்வரமெல்லாம் தந்தாயே
இந்த பிறவியிலுன் பாதம் பணிந்தவர்க்கு
இனிய வாழ்வளித்த அமுதானவனே
சிந்தை மாறாதுனை தொழுத அடியார்க்கு
பேரின்பம் அளிக்கும் எம் பெருமாளே ————————–(ஸ்ரீரங்கா -எமை காக்கும் செல்வமே)
ஆஹா! என்ன அருமை வணங்குகிறேன்
ஆஹா! என்ன அருமை வணங்குகிறேன்