முருகா முருகா
பல்லவி
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
சரணம் 1
முருகா முருகா என பெயர் சொல்லச்சொல்ல
அருகாமையில் வரும் தெய்வமே – முருகா
திருமாலின் மருமான் உன் திருநாமம் எம்நாவில்
அமிழ்தாக சுவைசேர்க்குமே – முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
சரணம்2
ஒருநாளும் தவறாமல் உனைக்காணும் அருள்பெற்று
திருநாளாய் விளங்கட்டுமே – முருகா
திரும்பாத வயதோடிப்போனாலும் , எம் உடல்
திடம் காக்கும் தமிழ் வீரமே – முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
சரணம்3
கந்தன் என்றாலும் அழகு கடவுள் என்றாலும்
இரண்டும் ஒன்றல்லவா – முருகா
செந்தமிழ் மொழி என்று அழகு அதன் பொருளென்று
தமிழ் தந்த எம் வேலவா – முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம்
தீர்மானம் 1
ஓம் முருகா முருகா முருகா- முருகா முருகா ஓம் ஓம்
ஓம் முருகா முருகா முருகா- முருகா முருகா ஓம் ஓம்
அருள்சேர் கணபதி கனி தரவிலையென மலை கண்டமர்த்தவனே – முருகா
அப்பனின் மனம்குளிர் மந்திரம் செப்பிய சுப்பிரமணி நீயே – முருகா
கெட்டவன் அசுரனை வதைசெய்தோழித்து செந்தூரில் உறைபவனே – முருகா
முப்புரி நூலொடு அந்தணன் வேடத்தில் வள்ளியை மணந்தவனே – முருகா
தணிகையில் இணையென துணையொடு குடிகொண்டருள் தரும் தமிழ்மகனே – முருகா
மனம்மகிழ்ந் இருவர் உடன் உறைந்தனை திருபழமுதிர்சோலையிலே- முருகா
ஓம் முருகா முருகா முருகா – முருகா முருகா ஓம் ஓம்
ஓம் முருகா முருகா முருகா – முருகா முருகா ஓம் ஓம்
தீர்மானம் 2
வயலூர் வயலிலும் மருத மலையிலும் கதிர்காமத்திலும் நின்றாய் – முருகா
விராலி மலையிலும் இரத்தினகிரியிலும் பத்துமலையிலும்குடி கொண்டாய் – முருகா
செட்டிகுளத்தில் கரும்புடன் நின்றாய் சிக்கலில் சிங்காரவேலா – முருகா
சென்னிமலையில் உயர்வேதம் நீ , விரைசெவ்வாய்க் கிரக நாயகனே – முருகா
ஓம் முருகா முருகா முருகா- முருகா முருகா ஓம் ஓம்
ஓம் முருகா முருகா முருகா- முருகா முருகா ஓம் ஓம்
– ஸ்ரீரங்கம் ரமேஷ்