ஜயஜய சங்கர ஹர ஹர சங்கர
பல்லவி
ஜயஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜயஜய சங்கர ஜெய ஓம்
குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் என்போம்
காரிருள் அறியாமையில் கிடந்தோமே
ஞானஒளி எமக்குத்தந்தாய்
பாரினை வென்றிடும் பாதையை காட்டிய
பாதகமலங்கள் சரணம்
சரணம் 1
ஈசனின் அம்சன் ஆசை அறுத்து
ஓசையில் மௌனமாய் ஆனாய்
காலடி மேலொரு காலடி வைத்து
காஞ்சிவரை படர் ஒளியே
ஆசையெனும் கடல் நடுவினில் தவிக்கும்
எமை காத்திடுவாய் குருவே
பாசத்துடன் எம் யாசகம் அறிந்தருள்
செய்வீர் சங்கர சிவமே
சரணம் 2
இம்மையில் மறுமையில் பிறகும் பிறவிகள்
எத்தனை வந்திட்டாலும்
தீமையில்லாது நன்மையையே தரும்
வினைகளை செய்திடல் வேண்டும்
பூமியில் வாழும் உயிர்களனைத்தும்
நலமுடன் வாழ்ந்திட அருள்வாய்
ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
ஹரஹர சங்கர சிவமே
—ஸ்ரீரங்கம் ரமேஷ்