அம்மா காமாக்ஷி தாயே
பல்லவி
அம்மா காமாக்ஷி தாயே
அன்போடு எமை ஆட்கொண்டவள் நீயே
கண்களின் இமைகளைப்போலே
தரணியிலே எமை காத்து நின்றாயே
நீயின்றி ஒன்றில்லை அம்மா
பூவுலகில் ஓர் உயிரும் இல்லை
பகலிலும் நடு நிசிதனிலும்
உணதருளின்றி நடப்பது ஏதும் இல்லை
சரணம் 1
பாலும், நெய்யும் ,கனியும் தந்து
அறுசுவையுடன் அன்னம் தந்தாய்
கருவினில், உருவினில் எமை வளர்த்தாய்
இன்னும் காத்திடவே நின்றாய்
நோயின்றி, வலி இன்றி, துன்பமின்றி
பேரின்பத்தில் எமை வைத்தாய்
வானிலும் ,மண்ணிலும் வளர் அமுதே
அம்மா காமாக்ஷி தாயே
(அம்மா காமாக்ஷி தாயே )
சரணம் 2
ஆல்போல் உறவுகள் அன்புகொண்டு
என்றும் வாழ நீ அருள்புரிவாய்
ஊனமில்லாமல் காத்திடுவாய்
உயிர் ஜோதி வளர்த்திடுவாய்
ஞானமும், செல்வமும் எமக்களித்து
கொடை குணமும் தா தாயே
சேய் உன்னை மறவாதிருக்க என்றும்
எம் மனதினில் குடிகொள்வாயே
(அம்மா காமாக்ஷி தாயே )
–ஸ்ரீரங்கம் ரமேஷ்