பகவானின் சஹஸ்ர நாமங்களுள்
‘ விவஸ்க்சேனா ‘ எனும் நாமம்
இந்த பிரபஞ்சைத்தையே எதிர்த்து போராடும் படைப்பலத்தை தனித்து தனக்குடையவன் எனும் பொருளாகும்.
‘ஜனார்த்தனன்’ எனும் நாமம்
தனித்து ஒருவனாக எந்த ஒரு துணை படையின்றி அடியார்க்கு துன்புறுத்தும் பகைபவர்களை அழித்து காப்பாற்றும் திறனுடையவர் எனும் பொருளாகும்.
இந்த இரண்டு நாமங்களின் பொருள் நன்குணர்ந்த அர்ஜுனன்
பகவான் மட்டும் பாண்டவர்கள் பக்கம் இருந்தால் போதும் என தீர்மானித்து
பகவானின் படைபலம் அனைத்தையும் துரியோதனனுக்கு விட்டுக் கொடுத்தான்.
பாரதப் போர் நடக்கும் போது ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பகவான் சரியான
முடிவு எடுத்து,
அதற்கான யுக்திகளை பகவான்
பாண்டவர்களுக்கு அறிவுறுத்தி அதன்படி போர் புரிய வைத்ததால்
பாண்டவர்கள் கௌரவர்களை வென்று வெற்றி வாகை சூடினர் .
எனவே அனந்தனான பகவான்
மஹா புத்தி, மஹாஸாஹச, மஹாவீர்ய,
மஹாசக்திமான் ஆவார்.
அவருக்கு நிகர் அவரே அன்றி வேறு யாருளர்?
ஓம் நமோ நாராயணாய !