ராகு – கேது

ராகு – கேது
0Shares
ராகு – கேது
ராகு = விஞ்ஞானம்,கேது=மெய்ஞானம்
குண்டலினி சக்தியை மேல் ஏற்றினால் கேது.
குண்டலினி சக்தியை கீழ் இறக்கினால் ராகு.
கேது ராகுவின் உருவத்தை பாருங்கள் நம் முன்னோர்கள் மூளை திறன் நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்திவிடும்.
தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் காரண கர்த்தா ராகுவே.
இந்த அசூரவேகமான விஞ்ஞான வளர்ச்சி அழிவை நோக்கியே நம்மை இழுத்துச் சென்று கொண்டுள்ளதை உணராமல் வெகு இன்பமயமாக வாழ்ந்து வருகின்றோம்.ராகுவிற்கு போகக்காரகன் என பெயர் வைத்தது சரி என்றே நினைக்கிறேன்.எல்லா சுகபோகத்தையும் தந்து,உடலை சர்ப்பத்தை போல் விஷமாக
அல்லவா ஆக்கி விடுகிறார்.
ஒரு கெட்டவனை பார்த்து நாம் பேச்சு வழக்கில் கூறுவோமே,இவனுக்கு உடம்பெல்லாம் விஷமடா என்று தானே.
அப்ப ராகு போகத்தையும் இன்பத்தையும் கொடுத்து உடலை கெடுத்தல்லவா விடுகிறார்.
உடல் என்பது சந்திரன்.
உடல் என்பது மனம்.
மனம் கெட்டால் உடல் தானாக கெட்டுவிடும்.உடல் கெட்டால் உயிர் போய்விடுமல்லவா?
அதனால் தான் திருமூலர் கூட பாடியிருக்கிறார்.
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானமும் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”
ஆக ராகுவால் அனுபவிக்கப்படும் அனைத்து சுகபோகங்களும் ஒரு மனிதனின் அழிவையே சந்திக்க வைக்கும்.
ராகுவே விஞ்ஞானம்.
விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் உடலை கெடுத்து
உயிரை அழித்து விடும்.
அதனால் தான் ராகுவை கொடுத்துக் கெடுப்பார் என நம் முன்னோர்கள் ஜோதிட பரிபாஷையில் மிக அற்புதமாக கூறிச் சென்றுள்ளார்கள்.
ராகுவால் ஆளப்படும் விஞ்ஞானம். விஞ்ஞானம் அல்ல அது ஒரு பொய்ஞ்ஞானம் என்று கூறுவதே சாலச்சிறந்தது.
ஆனால் கேதுவோ பாம்பின் தலையையும் மனித உடலையும் பெற்று, உடலை பாதுகாத்து உயிரை வளர்க்கும் மெய்ஞானக்காரகன் கேதுவே.
அதனால் தான் உடம்பை அழிப்பவர் மெய்ஞானம் சேரமாட்டார் என தெள்ளத்தெளிவாக திருமூலர் கூறியுள்ளார்.
மேலும் திருமூலர் கேதுவிற்கு ஒரு பாடலையும் மிக அற்புதமாக எழுதியுள்ளார்.
“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேனே
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.”
ஆக கேது உடம்பை பற்றிய உண்மையான ஞானத்தை அறிய வைத்து அதில் உத்தமனாகிய சிவன் அமர்ந்துள்ளான் என்பதை அறிய வைத்து,சவம் ஆகிய இந்த உடம்பை சிவமாக்கி ,
உயிரை அழியவிடாமல் தடுத்து அழியா முக்திப்பேற்றை தருவது கேதுவே.
பற்று அற்ற வாழ்க்கை வாழ்ந்தால் கேது மெய்ஞானத்தை உணர வைத்து பிறவா வரம் என்னும் முக்தியை நிச்சயம் தருவார்.
பற்று உடைய வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ராகு பொய்யான ஞானத்தை கொடுத்து, மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க வைத்து மனிதனை இறைநிலையை அடைய விடாமல் தடுத்து விடுவார்.
ராகு உடம்பால் பெறும் அனைத்து சுகத்தையும் கொடுத்து உயிரை கெடுத்து விடுவார்.
கேது உடம்பால் பெறும் அனைத்து சுகத்தையும் கெடுத்து உயிரை கொடுத்து விடுவார்.
இப்ப தெளிவாக புரியும்.
ராகு கொடுத்து கெடுப்பான்.
கேது கெடுத்து கொடுப்பான்.
உங்களுக்கு எது வேண்டும்
என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இனி யாரும் விஞ்ஞான வளர்ச்சி என்று கூறாதீர்கள்.
ராகு விஞ்ஞானத்தின்வீழ்ச்சி.
கேதுவே மெய்ஞானத்தின் வளர்ச்சி.
நம் சித்தர்கள் கண்ட சாகா கலையே உண்மையான மெய்ஞான வளர்ச்சி.
இன்றைய விஞ்ஞானம் ஒரு மனிதன் சாகாமல் இருக்க என்ன வழி என்று ஆராய்ந்து விட்டு,உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டால் உயிர் போகத்தானே வேண்டும் என்ற மிகப் பெரிய கண்டுபிடிப்பை பிடித்து விட்டது.
ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே உயிர் போகமல் இருக்க செய்யும் வழிமுறையை அறிந்தவர்கள் நம்முடைய
சித்தர்களே என்று நாம் பெருமையடையலாமே.
மனிதனின் உயிரை வளர்க்கும் கலை மெய்ஞானக் கலை.
இத்துடன் போய் விஞ்ஞானத்தை ஒப்பிட்டு பேசி அழிவை தேடவேண்டாமே.
விஞ்ஞானம் என்பது வீழ்ச்சி
மெய்ஞ்ஞானம் என்பதே உண்மையான வளர்ச்சி.
அனைவரும் அந்த உண்மை ஞானத்தைப் பெற்று தீர்க்காயுளுடன் வாழ முதன்மை கடவுளாகிய வினாயக பெருமானை வழிபட்டு வாருங்கள்.
உங்கள் குண்டலினி சக்தி விழிப்படைந்து மேல் ஏற்றினால் பிறவா முக்தி நிச்சயம்.
ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் சரணம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *