பீஷ்மர் உபதேசித்த 24 நாமங்கள்
மகாபாரத போரில் அடிபட்டு உத்தராயணம் வந்த பிறகு தன் இச்சைப்படி வீரமரணம் எய்திய பீஷ்ம பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து துதித்த 1008 நாமங்களே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆயிற்று. அதில் 24 நாமங்கள் முக்கியமானதாக அவர் கூறினாலும் மூன்று முறை ராம நாமத்தை உச்சரித்தாலேயே ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொன்ன புண்ணியம் கிடைப்பதாக பரமசிவன் பார்வதி அம்மைக்கு உபதேசம் செய்திருக்கிறார். பீஷ்மர் உபதேசித்த 24 நாமங்கள்.
. பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்
யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.
அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.
24 திருநாமங்கள்
ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
“ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்”