பிரம்ம முஹுர்த்தத்தில் மணக்கும் பாரிஜாதம்..!
#பவழமல்லிகை மலர்கள் – ஆன்மீக மருத்துவம்..!
இறைவனுக்குச் சமர்ப்பிக்கக் கூடிய கோட்டு மலர்களில் மிகச்சிறப்பானது #பாரிஜாதம் எனப்பெறும் பவழமல்லி மலர்கள்.
மல்லிகை மலர் போன்ற வெண்மையான இதழ்ப்பகுதிகளையும்; செம்பவழ நிறத்தில் காம்பினையும் கொண்டுள்ளமையால் இவற்றிற்கு பவழமல்லி/பவளமல்லி என்ற காரணப்பெயர் உண்டாகி விட்டது.
தேவர் உலகத்திலிருந்து பூமிக்கு க்ருஷ்ணபகவானால் கொண்டு வரப்பெற்ற சிறப்பு இவற்றிற்கு உண்டு. தரையில் உதிர்ந்தாலும் இவற்றைச் சேகரித்து பூஜைக்கு உபயோகிக்கலாம். பின்னிரவு மலரத் துவங்கி அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னரேயே உதிர்ந்து விடும் தன்மை உடையவை இவை.
இதனால் பவழமல்லிக்கு ‘#ப்ரம்ஹதர்ஷனபுஷ்பம்’ என்ற பெயரும் உண்டு.
‘#பாரிஜாதா’ என்ற தேவலோகப் பெண் ஒளிக்கடவுளான சூரியனை விரும்பினாள். தனதன்பு நிராகரிக்கப் பட்டமையால், சூரியனைக் காண விரும்பாத அவள் இரவு நேரங்களில் சிந்தும் கண்ணீர்த்துளிகளே இப்படி பாரிஜாதமலர்களாக பூமியில் உதிர்கின்றது என்கிற ஒரு சுவையான சித்தரிப்பும் உண்டு.
பாரிஜாத வனங்களில் உறையும் சிவபெருமானுக்கு ‘#பாரிஜாதவனேஸ்வரர்’ என்பது திருநாமம் .
#சீர்காழி,தென்குரங்காடுதுறை, திருநறையூர், திருக்களர் முதலான பல ஆலயங்களில் பாரிஜாதம் ஸ்தல விருக்ஷமாகத் திகழ்கின்றது.
தில்லையில் பெருமான் பதஞ்சலி வியாக்ரபாதருக்கு நிகழ்த்திய ஆனந்த தாண்டவ தரிசனம் தமக்குக் கிட்டவில்லையே என வருந்திய #தூர்வாஸமுனிவர் திருக்களரில் பாரிஜாதவனத்தில் ஈஸ்வர பூஜை செய்து
‘#ப்ரம்மதாண்டவ #தரிசனம்’ கண்டு மகிழ்ந்ததாக வரலாறு.
இப்பூக்களின் மெலிந்த தன்மையினால் நார்கொண்டு தொடுக்கவியலாது. ஒன்றன்பின் ஒன்றாகக் கோர்த்தே
மாலையாக்கிட இயலும்.
சரஸ்வதி தேவியை இம்மலர்கள் கொண்டு பூஜிக்கக் கூடாது என்பர்.
‘#சேடல்’ என்பது இதன் சங்ககாலப் பெயர். வைகை ஆற்றங்கரையில் பூதங்கள் சேடல் மலர்களை அணிந்தாடின என்பது மதுரைப் புராணச் செய்தி.
மூவிலை இதழமைப்பு உடையன.
இதன் மூன்று இலைகளில் மும்மூர்த்திகளும்; வேரில் ஹனுமனும் விரும்பி உறைவதாக ஐதீகம்.
அதீத நறுமணம் இவற்றிற்கு உரிய சிறப்பு. அம்பிகை விரும்பிச் சூடும் மலராக விளங்குகின்றன.
இம்மலர்களால் பூஜிப்பதால் அன்னையின் அருளால் எளிதில் இஷ்டகாரியசித்தியை அடையலாம்.
‘NYCTANTHES ARBOR TRISTIS’
எனும் தாவரவியல் பெயராலும்;
‘#CORAL #JASMINE’ (Night Jasmine) என்ற ஆங்கிலப் பெயராலும் இம்மலர்கள் குறிக்கப் படுகின்றன.
சுற்றுச் சூழல் மாசுபாட்டினைக் குறைக்கும் திறன் அதிகம் கொண்டவை.
இதன் நறுமணம் விரும்பத்தக்கது என்பதுடன் இதனை சுவாசிப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு அதீத நன்மைகளைத் தரவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மலர்களை குனிந்து சேகரிக்கும்போது மூச்சுப்பிடிப்பு, இடுப்பு வலி, மூட்டு சம்பந்தமான வலிகள் ஆகியவை தாமாகவே நிவர்த்தி ஆகிவிடும் என்பது மறைமுகப் பயன்.
இதனாலையே பொதுநலன் கருதி வீட்டு வாயில்கள் தோறும் பவழமல்லி மரங்களை வளர்த்து வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.
இத்தாவரத்தின் இலை, பட்டை, வேர், பூ என அனைத்துமே மருத்துவத் தன்மை உடையவை.
பெண்கள் நலனுக்கு உகந்த இயற்கையின் கொடை இந்த பாரிஜாதம்.
பாரிஜாத இலைகள் சிலதுகளுடன் மிளகு சீரகம் சிறிது சேர்த்து ஒன்று சேர கொதிக்கவிட்டு, வடித்த நீருடன் சுவைக்கு நாட்டுச்சர்க்கரையுடன் தேன் சேர்த்துப் பருகிவர நுண்கிருமித் தொற்றுகள், காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி இனங்கள் காணாமல் போய்விடும் என்பது அனுபவ உண்மை.
பவழமல்லி இட்டு காய்ச்சிய முக்கூட்டு எண்ணெயும்; இதன் இலைப்பற்றும் ஆகச்சிறந்த மேற்பூச்சு வலிநிவாரணிகள்.
Anti inflammatory and analgesic மருந்துகளை நம்பியே காலந்தள்ளும் artherities பிணிக்குலத்தினர் இன்று மிகுதி.
இயற்கையின் கொடையாகிய இதனருமை உணராமல் கொடும் பக்கவிளைவுகளைத் தந்திடும் ஆபத்தான வலிநிவாரணிகளை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் இத்தலைமுறையில் மலிந்து விட்டிருக்கிறது. மாற்றுமருத்துவ
Liniment வகையறாக்களால் நிரந்தரத் தீர்வு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து, பக்கவிளைவுகளற்ற இத்தகு இயற்கை முறைகளைப் பின்பற்ற முயற்சிக்கலாமே..!