பாவத்துக்குமீட்சி உண்டா…?”

பாவத்துக்குமீட்சி உண்டா…?”
0Shares
பாவத்துக்குமீட்சி உண்டா…?”
ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்,
“நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து
தினமும் துடிக்கிறது  நான் செய்தபாவத்துக்குமீட்சி உண்டா…???”
அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,
‘நான் இவர் அளவுக்கு பெரிய பாவம் எல்லாம் செய்ய வில்லை.
சின்னச் சின்னப் பொய்கள்.சிறு ஏமாற்றுக்கள்.இப்படி நிறைய செய்துள்ளேன்.
தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன…????”
ஞானி சிரித்தார் முதலாமவனிடம் “நீ போய் பெரிய பாறை ஒன்றை தூக்கிவா.” என்றார்
இரண்டாமவனிடம் ” நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களை பொறுக்கிவா.” என்றார்
இருவரும் அவ்வாறே செய்தனர்
முதல்வன் ஒரு பெரிய பாறையை தூக்கி வந்தான் அடுத்தவன் கோணி நிறைய
சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான்
இப்போது ஞானி சொன்னார்
” சரி, இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்தஇடத்தில் எடுத்தீர்களோ
அங்கேயே திரும்ப போட்டுவிட்டு வாருங்கள்,” என்றார்…
முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டு திரும்பினான்.
இரண்டாமவன் தயக்கத்துடன்,
” இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்தஇடத்திலேயே வைக்க முடியும்..??? என்று கேட்டான்
” ஞானி சொன்னார் ” முடியாதல்லவா?
அவன் பெரிய தவறு செய்தான்அதற்காக வருந்தி அழுது
மன்னிப்புக் கேட்டு அவன் மாற்று பரிகாரம் செய்து
அவன் மீட்சி அடையலாம் நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும்
அவை பாவம் என்று கூட உணராதவன் யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்
என்று கூட உனக்கு நினைவிருக்காது..
அவனுக்கு மீட்சி சுலபம்”உணக்குத்தான் மீட்சி என்பது
மிகக் கடினம் என்று கூறி புரிய வைத்தார் ஞானி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *