துளசியின் மகிமை !

துளசியின் மகிமை !
0Shares
துளசியின் மகிமை !
 ஏழை ஒருவன் தினமும் அதிகாலையில் எழுந்து தனக்கு சொந்தமான வயற்காட்டுக்கு சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார்.
அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு சிறு இல்லத்தில் பிராமணர் ஒருவர் சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து துளசி இலையை வைத்து பூஜை செய்வதை பார்த்து கொண்டே போவான்.
ஒரு நாள் அதே போல் பிராமணர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதை பார்த்துகொண்டே வயற்காட்டுக்கு கீரை பறிக்க சென்றான்.
கீரை வகைகளை பறிக்கும் போது அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதை கண்டான். அப்போது அவனுகு அந்த பிராமணர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகம் வந்தது.
உடனே நாமும் அந்த பிராமணரை போன்று ஒரு மனித பிறவி தானே? இதுவரை என்றாவது பெருமாளுக்கு ஒரு சிறு பூஜை செய்திருக்கிறோமா?
சரி நம்மால் தான் விக்ரஹத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை இன்றுமுதல் இந்த துளசியையாவது பறித்து சென்று அந்த பிராமணர செய்யும் பூஜைக்கு அர்ச்சனையாக கொடுப்போமே என்று செடியில் இருந்து துளசியையும் சேர்த்து பறித்து கீரை கட்டோடு ஒன்றாக போட்டு தலை மீது வைத்து கொண்டு பிஈமணரின் இல்லம் நோக்கி போனான்.
ஆனால் அவன் பறித்து போட்ட கீரை கட்டில் ஒரு சிறு கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கவில்லை.
பிராமணரின் இல்லத்து முன் வந்து நின்றான் ஏழை விவசாயி.பிராமணன் ஏழையை பார்த்தார். அவன் பின்னே அருவுருவமாய் யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்.
பின் தான் கண்ணை மூடி தன் ஞான-திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்று பார்த்ததில் அந்த ஏழையின் பின்னே நிழல் போல் நிற்பது கிரகங்களில் நாகத்தின் அமசத்தில் ஒருவரான ராகு நின்றிருந்தார்.
பிராமணர் உடனே ஏழையிடம் அப்பா உன் தலையில் உள்ள கீரை கட்டை அப்படியே வைத்திரு ஒரு ஐந்து நிமிடம் அதை கீழே இறக்க வேண்டாம் இதோ வந்து விடுகிறேன் என்று கூறி குடிலின் பின் பக்கம் சென்று ஒரு விதமான மந்திரத்தை உச்சரித்து ஏழையின் பின்னே நின்றிருந்த ராகு கிரஹத்தை அழைத்தார்.
ராகுவும் ஆச்சரியத்துடன் பிராமணர் முன்னே வந்து நின்று வணங்கி ஸ்வாமி என்னை தாங்கள் அழைத்த காரணம் என்ன என்று கேட்டான்.
பிராமணரும் ராகுவை வணங்கி ராகுவே எதற்காக இந்த ஏழையை பின் தொடர்ந்து வருகிறாய் என்ன காரணம் என்று நான் அறியலாமா என கேட்க
ராகுவோ ஸ்வாமி இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கரு நாகம் உருவம் எடுத்து தீண்ட வேண்டும் என்பது இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பகவானின் பிரியமான துளசியை இவன் தலையில் சுமந்து வருவதால் இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.
இவன் தலையில் சுமந்திருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த கணமே அவனை தீண்டி விட்டு என் கடமையை முடித்து கொண்டு நான் கிளம்பி சென்று விடுவேன் என்றார்.
பிராமணனுக்கு ஏழை மேல் பரிதாபம் ஏற்பட்டது எவ்வளவு ஆசையாக நம் பூஜைக்காக துளசியை பறித்து கொண்டு வந்துள்ளான் அவனை காப்பற்ற முயற்சிக்க வேண்டும் என்றெண்ணி ராகுவே அவனை நீர் தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா என்றார்.
 ஸ்வாமி இத்தனை காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழைக்கு தாரை வார்த்து கொடுத்தால் அவனது சர்ப்பதோஷம் நீங்க பெற்று அதனால் நான் அவனை தீண்டாமல் சென்று விடுவேன் என்றார்.
பிராமணரும் அகமகிழ்ந்து அவ்வளவுதானே இதோ இப்பொழுதே நான் இதுவரை பெருமாளுக்கு செய்த ஆராதனை செய்ததற்காக பலன் என ஏதும் இருந்தால் அது முழுவதையும் அந்த ஏழைக்கு தாரை வார்த்து தருகிறேன் என்று கூறி ஏழைக்கு தன் ஆராதனை பலனை தாரையாக வார்த்து கொடுக்க ராகு பகவானும் பிராமணரின் தர்ம குணத்தை எண்ணி மகிழ்ந்து மறைந்து போனார்.
கீரை கட்டில் இருந்த கரு நாகமும் மறைந்தது.பிராமணர் அந்த ஏழையிடம் அப்பா இனி நீ தினமும் என் பூஜைக்கு துளசி பறித்து வரவேண்டும் சரியா என்றார்.
ஏழைக்கு மிகுந்த மகிழ்ச்சி நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும் முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறதே என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே இல்லம் நோக்கி சென்றான்.
அபிமானிகளே வைகுண்ட வாசன் ஹரி நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஆழ்ந்த பக்தியே.
பக்தியோடு சிறு துளசி இலையை கொடுத்தாலும் பரவசமாய் அவன் ஏற்பான்.
எனவே பகவத் ஆராதனம் தினமும் செய்யுங்கள் மிகுந்த நன்மை அடையுங்கள்.
நமஸ்தே துளசி தேவி !
நமோ நமஸ்தே நாராயண ப்ரியே !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *