சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள்!
அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (emoloyee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா? பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்.
அன்று, பிராம்மணர்கள்
4 வேதங்கள், அதனுடைய உபநிஷத்துக்கள்,
4 உப வேதங்கள், 6 சாஸ்திரங்கள்,
ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள், புராணங்கள்,
8 வேதாந்த சித்தாத்தங்கள்,
64 கலைகள் படித்தார்கள்,
படித்தார்களே தவிர, அதில் கிடைக்கும் பயனை மற்றவர்களுக்கு தான் கொடுத்தார்கள்..
64 கலைகளில் கோவில் சிற்பம் வடிப்பது ஒரு கலை. அதை செய்தது சூத்திரன் (empoyee) தானே?
அரசர்கள் தானே அஸ்திரங்கள், சஸ்திரங்கள் பயன்படுத்தினர்?
அன்று வைத்தியம் செய்தவர்கள் பிராம்மணர்கள் இல்லையே?
பெரிய பெரிய மாளிகைகள் அமைத்தது பிராம்மணன் இல்லையே?
க்ஷத்திரியர்கள், உபநிஷத்தில் சொல்லப்படும் தனுர் வேதத்தை (Army/weaponry) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.
சூத்திரனும், வைஸ்யர்களும் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதத்தை (music) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.
அது மட்டுமா,
கீழே சொல்லப்பட்ட அனைத்தும் ப்ராம்மணர்களிடம் கற்றுக்கொண்டனர்.
பணம் சம்பாதிக்கும் வழி அனைத்தையும், தொழில்களையும் மற்ற அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த பிராம்மணர்கள் தனக்கென்று புருஷ சூக்தம், ஸ்ரீ ருத்ரம் என்று தெய்வத்தை பற்றி பாடும் வேத மந்திரங்களை மட்டும் வைத்து கொண்டனர்.
அன்று சுயநலம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த ப்ராம்மணர்களை, நன்றி உணர்ச்சியுடன் மற்றவர்கள் பொருள் உதவி செய்து காப்பாற்றினார்கள்.
பிராம்மணன் தொழில் திறன் இருந்தும், அஸ்திர சஸ்திர அறிவு இருந்தும் பிறர் தொழில் செய்ய வழி விட்டு, தினமும் யாசகம் செய்து வாழ்ந்தான்.
இதனால், பிராம்மணர்கள் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர்.
1000 வருட இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், செல்வம் கொழித்த பாரத மண்ணில் கோவிலை தாக்கிய இவர்கள்,கோவிலில் இருந்த ப்ராம்மணர்களை முதலில் கொன்று குவித்தனர்.
கோவில்களை இடித்தனர். தங்கள் ஸ்தூபங்களை கட்டினார். பொது மக்களை கொன்று குவித்தனர். ஊரில் உள்ள பெண்களின் மானத்தை அழித்தனர். எதிர்த்த பொது மக்களை தலை சீவினர். பயந்த பொது மக்களை மதம் மாற்றினார். பெண்களை கர்ப்பமாக்கி தன் மதத்துக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உருவாக்கி, பாரத மக்களாக வாழ்ந்த நமக்குள்ளே மத வேறுபாட்டை விதைத்து சண்டையிட வைத்தனர்.
பாரத மண்ணில் இருந்த க்ஷத்ரிய அரசர்களை நேரில் எதிர்த்தால் தோற்க வேண்டி இருக்கிறது என்றதும், சமயம் பார்த்து, இரவு நேரத்தில் திடீரென்று ஊரில் புகுந்து பொது மக்களை, கோவிலை பிடித்து அரசர்களை கீழ் படிய வைத்து, பிறகு தலை சீவி நாட்டை மெது மெதுவாக பிடித்தனர்.
க்ஷத்ரிய அரசர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்ட போது, வைஸ்யர்களும், சூத்திரர்களும் அனாதை ஆகினர்.
தங்களை காத்து கொள்ள முடியாத நிலையில், பிராம்மணர்கள் கைவிட பட்டனர்.
முகம்மது பின் துக்ளக் – கடுமையான வரியை ஹிந்துக்களுக்கு விதித்து, மதம் மாற சம்மதித்த பாரத மக்களுக்கு வரி சலுகை செய்து ஆட்சி செய்தான்.
அப்பொழுது, தங்கத்தில் நாணயம் வைப்பதை காட்டிலும், செம்பு நாணயம் செய்தால் எளிதாக இருக்கும் நினைத்து நாணயத்தை மாற்றினான்.
அப்பொழுது பாரத நாட்டில் இருந்த அனைத்து ஹிந்துக்களும் தாங்களே செம்பு நாணயம் செய்து விட்டனர். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட, துக்ளக் மீண்டும் தங்கத்துக்கே நாணயத்தை மாற்றினான் என்று பார்க்கிறோம்.
64 கலைகளும் சர்வ சாதாரணமாக ஹிந்துக்கள் தெரிந்து வைத்து இருந்தனர் என்பது இந்த ஒரு நிகழ்விலேயே தெரிகிறது.
இத்தனை கலைகளும் கற்ற சூத்திரர்கள், வைசியர்கள், தாங்கள் கற்ற கலைகளை முடிந்த அளவு 1800 வரை காத்தனர். கிறிஸ்தவ ஆட்சி பாரதம் முழுவதும் ஏற்பட்டதும், இதுவும் நசுக்கப்பட்டு, பாரத மக்கள் அனைவரும் ஏழையாக்கப்பட்டனர்.
இந்த உண்மையை உணரும் போது, தான் சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள் என்பது நமக்கு புரியும்.
இதோ சூத்திரனுக்கு, வைஸ்யர்களுக்கும் கற்று கொண்டவைகள்:
இசை, வாத்யம், ந்ருத்தம், நாட்டியம், ஆலேக்யம் (painting), விசேஷ கச்சேத்யம் (wood carving), தண்டுல குஸுமபலி விகாரா, புஷ்பா ஸ்தரணம், தசன வஸனாங்கராகா, மணி பூமிகாகர்ம, சயன ரசனம், உதக வாத்யம் உதககாத, சித்ர யோகா, மால்யக் ரதன விகல்பா, சேகரா பீட யோஜனம், நேபத்ய யோகா, கர்ணபத்ர பங்க, ஸுகந்த யுக்தி, பூஷண யோஜனம், இந்த்ர ஜாலம் (magic), கௌதுமார யோகா, ஹஸ்தலா கவம், விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா (cooking), பானக ரஸ ராகா ஸவ யோஜனம், ஸூசீவாயக கர்ம (weaving), ஸூத்ர க்ரீடா, வாத்ய க்ரியா, ப்ரஹேலிகா, ப்ரதிமாலா, துர்வசன யோகா, புஸ்தக வாசனம் (teaching), நாடகாக் யாயிகா தர்சனம் (stage play), காவ்ய ஸமஸ்யா பூரணம், பட்டிகா வேத்ர பாணி விகல்பா, தர்க்க கர்மாணி, தக்ஷணம் (carpentry), வாஸ்து வித்யா (civil engineering), ரத்ன பரீஷா (diamond expert), தாது வாத, மணி ராக ஞானம், ஆகார ஞானம், வ்ருஷ ஆயுர்வேத யோகா, மேஷ குக்குடலாவ யுத்த விதி, சுக ஸாரிகா பிரலாபனம், உத் ஸாதனம், கேச மார்ஜன கோசலம் (hair stylist), அக்ஷர முஷ்டி காகதனம், தாரண-மாத்ருகா, தேச பாஷா ஞானம், நிர்மிதி ஞானா, யந்த்ர மாத்ருகா, மிலேச்ச பாஷை / மிலேச்ச குதர்க்கம், ஸம் வாச்யம், மானஸ காவ்ய க்ரியா, க்ரியா விகல்பர் (art of management), ச்சலித யோகா, அபிதான கோச சந்தோ ஞானம், வஸ்த்ர கோபனம், த்யூத விசேஷா, ஆகர்ஷ க்ரீடா, பால க்ரீடா, நௌகா நிர்மாண கலா, புஷ்பச கடிகா நிர்மாணம், விமான நிர்மாண கலா
சாந்தீபிணி என்ற ப்ராம்மணர், குசேலன் என்ற ப்ராம்மணனுக்கும், இடையனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அனைத்தையும் சொல்லி கொடுத்தார்.
குசேலன் ஏழையாக வாழ்ந்தாலும், தொழில் செய்ய திறன் இருந்தும், தெய்வத்தை பற்றி சொல்லும் வேதத்தை மட்டுமே ஓதி வந்தார்.
சூத்திரன் அடிமுட்டாளாக இருந்தார்கள் என்று உளறி, 1000 வருடத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் கற்ற கல்வியை இழந்தனர் என்பதை மறைப்பதற்காக, அனைத்தையும் கற்று கொடுத்த ப்ராம்மண சமுதாயத்தை பழிப்பது, முட்டாள்தனம்.
இந்த அனைத்து கலைகளும் தெரிந்தவர்களாக அனைவருமே இருந்தார்கள்.