சீனிவாச ராமானுஜம்

சீனிவாச ராமானுஜம்
0Shares

சீனிவாச ராமானுஜம்

 

தமிழ்நாட்டில் கடந்த எழுபது வருடமாக இருக்கும் பொய்களில் பிரதானமானது பிராமணர் சுரண்டல்காரர், பிராமணர் பணக்காரன் இன்னபிற‌

உண்மை அது அல்ல, அக்காலத்திலே மகா ஏழை பிராமணர்களும் இருந்தார்கள். ஒருவேளை உணவுக்கே சிரமபட்டார்கள், ஆனால் அவர்களிலும் மகா மகா அறிவாளிகள் இருந்தார்கள்

அவர்களில் ஒருவர்தான் சீனிவாச ராமானுஜம்

அவர் ஈரோட்டில் பிறந்து, காஞ்சியில் வளர்ந்து கும்பகோணத்தில்தான் தொடக்க கல்வி கற்றார், குடும்ப சூழல் அப்படி அவரை விரட்டியது

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், தெய்வத்தின் அனுகிரஹம் வேண்டும்

அவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் கணித அறிவினின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.

அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.

ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக‌ நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் “டெப்பாசிட்” காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை,” பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு” எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது.

அவரோ கும்பகோணம் மரத்தடி, கோவில் மண்டபம், தெப்பகுளத்து க்ரையெல்லாம் இருந்து கணிதத்திலே சுவாசித்தார், கணிதத்திலே வாழ்ந்தார், அதோடு நீந்தினார், தூங்கினார்.

அவரின் கணிதபசி கண்ட தெய்வம் இறங்கி வந்து கனவில் அவருக்கு போதித்தது, ஆம் ராமானுஜமே சொன்னபடி நாமகிரிதாயார் எனும் வித்யாகாளி அவருக்கு பல கணித வழிகளை கனவில் சொன்னது

ஆம், அது நடந்தது, நடந்த உண்மை சம்பவம் அது.

தன் அபார அறிவில் , தன் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார் ராமானுஜம்.

“கொடிது கொடிது இளமையில் வறுமை” என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அதுதவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை

அவர் எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.

ஆம் அவ்வளவு கடும் வறுமை, தகப்பனாரின் ஜவுளிகடை எழுத்தர் பணி வேலை அவர் பசியினை ஒருவேளை மட்டும் குறைத்தது, அறிவை கொடுத்த தெய்வம் செல்வம் கொடுக்க மறுத்தது

அவன் கர்மா கணித அறிவுமட்டுமே என சொல்லி அன்று ஒதுங்கி கொண்டது காளி.

கவனியுங்கள் இங்கு பிராமணன் ஒரு வெறும் எழுத்தன், கடை முதலாளி பிராமணன் அல்ல, பின் எங்கிருந்து பிராமண ஆதிக்கம் இருந்ததோ தெரியவில்லை, எல்லாம் திராவிட கும்பல் பொய் சிந்தையில்தான் இருந்தது.

யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார்.

லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை, ஆம் செருப்பு கூட இல்லை.

எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், வறுமை அவரை வேலைக்கு அனுப்பி வைத்து சிரித்தது. அறிவு எனும் சொத்து வயிற்று பசியிடம் தோற்று கொண்டிருந்த நேரமது.

விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித அவர் ஆராய்ச்சி தொடர்ந்தது. ஆம் தாத்தா, தந்தை போலவே எழுத்து பணி

ஒரு கணித சூரியன் அங்கு மேஜை விளக்காய் எரிந்து கொண்டிருந்த கொடும் காலமது, இப்படியே வாழ்வு கழிந்துவிடுமோ என ராமானுஜன் அஞ்சிய நேரமது. அந்த நாமகிரிதாயினை தவிர நம்பிக்கை ஏதுமில்லா காலங்கள் அவை.

தெய்வம் ஊட்டாது ஆனால் வழிகாட்டும். அவர் நம்பிய அந்த தெய்வம் அவருக்கு நல்வழி காட்டிற்று

திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, அவரின் கணித மேதாவிதனம் அய்யர் ஒருவரின் கண்களில் படுகின்றது. அந்த கணித ஆசிரியர் உதவியில் ஒரு ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார்.

(அது விஞ்ஞான வளர்ச்சியில் பிரிட்டன் ஜெர்மனை முந்த வேண்டும் என்ற வெறியோடு நின்ற காலம்

உலகெல்லாம் விஞ்ஞானிகள், மேதைகளையெல்லாம் விரட்டி விரட்டி பிடித்த காலம், ஒரு ஓலைசுவடி கிடைத்தாலும் பொன்போல் தூக்கி ஓடிய காலம்.

ஆம் பிரிட்டனுக்கென பெரும் இதிகாசம் கிடையாது, பண்டைய சாஸ்திர விஞ்ஞானம் கிடையாது, எதுவுமே இல்லா கலாச்சார வறட்சி தேசம் அது. அவர்களின் ஷேக்ஸ்பியர் கூட பிற்காலத்தவனே

இந்தியாவின் ஆரியபட்டர், அரேபியாவின் சிறந்த மேதைகள் போல் அங்கு யாருமே இல்லை, கிரேக்கர்கள் இந்திய தொடர்பால் சில அறிவுகளை பெற்றிருந்தனர் அதுவும் அலெக்ஸாண்டர் செய்த உதவியில்

இதனால் எதுவுமே இல்லா பிரிட்டானியர் உலகெல்லாம் அறிவு பிச்சை எடுத்தார்கள், ஓடி ஓடி எடுத்தார்கள், அதை வெளிதெரியாமல் எடுத்தார்கள்.)

தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில‌ கணித ஆசிரியர்.

மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்

“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு இரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்வேன், இரவு பகலாக செய்வேன்.

கணிதம் என்னில் ஊற்றெடுக்கின்றது, ஆனால் வறுமையும் பசியும் அதை அடைக்கின்றன”, கண் கலங்கினான் அந்த அதிகாரி

அவன் என்ன கலங்குவது? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.

அந்த அதிகாரி வடிவில் தெய்வம் உதவியது, ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார் அந்த நல்லவன்.

காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.

நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite series), இன்னும் ஏராளமாக‌ என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.

சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.

படிக்க லாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”

உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன் அவன் . முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல் அவன்.

அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.

அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார்,

இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.

5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது

ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.

அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், அது அன்று மூட நம்பிக்கை என்றாலும் கொரோனா காலம் அதற்கான விடையினை கொடுத்தது.

மொத்தத்தில் விதி சரியாக வேலை செய்தது. நோய் தீரமறுத்து மல்லுகட்டியது.

லண்டனின் குளிர் ராமானுஜனுக்கு சரிவரவில்லை அது காசநோயினை உண்டாக்கியது, ராமானுஜன் அசைவம் எடுத்திருந்தால் வாழ்ந்திருக்கலாம், ஆனால் கடைசிவரை இந்திய கலாச்சாரத்தில் நின்ற அவன், ஒரு உயிரை கொன்று வாழ்வது எங்கள் தர்மம் அல்ல என மறுத்து நின்றான்

வலுகட்டாயமாக வற்புறுத்தபட்டபொழுது அதை நான் தொட்டால் பின் என் தெய்வ அனுகிரகம் போய்விடும், பின் வாழ்ந்து என்ன பயன்? என மறுதலித்து நின்றான் ராமானுஜம்

தன் உச்சபுகழிலும் அதை தொட நினைக்காமல் தன் கலாசார அடையாளத்தை, பாரத தாத்பரியத்தை காத்து நின்றான் ராமானுஜன்.

நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற‌ “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,

32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை.

ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.

ஆம் ஐன்ஸ்டீனுக்கு வான்வெளி கோள்கள் சுற்றுபாதைக்கும் அணுவின் இயக்கத்துக்குமான பொதுவிதி ஒன்று புரிந்தது

ஆனால் அதற்கான சூத்திரத்தை உருவாக்க அவனால் முடியவில்லை, ஒருவேளை ராமானுஜம் இருந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பான்.

அவனின் குறிப்புகளை தமிழகத்தில் காணமுடியாது அனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல வேதம்.

சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் பேச கூடாது.இதுதான் தமிழக யதார்த்தம்.

கணிதத்தில் சுயம்பாக அவர் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்த சாதனை உலகம் எக்காலமும் வியக்கும் ஒன்று.

உலகை புரட்டி போட்ட கனித மேதைக்கு மாநில அரசு ஒன்றும் செய்யவில்லை மாறாக மத்திய அரசு அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.

அவன் வாழ்ந்தது முப்பத்திரண்டு ஆண்டுகள்தான், ஆனால் பல யுகங்களுக்கான சாதனையினை செய்துவிட்டு சென்றவன் அவன்..

அவன் விட்டுசென்றிருக்கும் கணித புதிர்களுக்கு அவன் வந்துதான் விடையளிப்பான் என காத்து கொண்டிருகின்றது கணித உலகம்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *