“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?

“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?
0Shares
“சாப்பாட்டுராமா!” என்ற பெயர் எப்படி வந்தது?
சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை “சாப்பாட்டுராமா!” என கேலி செய்வதுண்டு.
ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது?
இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணர் சுக்ரீவர் விபீஷணர் மற்றும் வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க விரும்பினார்.
ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமானால் பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதை நினைத்துப் பார்த்தார். 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிடில் தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமுமில்லை. முனிவரை விரைந்து சென்று தரிசித்து பின் அயோத்தி செல்ல முடிவுசெய்தார். பரத்வாஜமுனிவர் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியயும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
”இரவாணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு நாளை இங்கு நடக்கும் ததீயாராதனையில் கலந்துகொண்டு (திருமாலடியார்க்கிடும் விருந்துணவு) உணவு உண்டு செல்ல வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார்.ஆகவே அனுமனை அழைத்தார்.
”அஞ்சனைகுமாரனே !என் அருமை பக்தனே! எனக்காக நீ பரதனிடம் சென்று நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை சொல்லி விட்டுவா.வாயு புத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்குவரவேண்டும்”. அனுமன் அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இறைப்பொழுதில் அங்கிருந்து அகன்றான்.
மறுநாள்…
விருந்திற்காக இலையினைப் போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர். அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான் அனுமன் விருந்துக்குவருவாரென முனிவர் நினைக்கவில்லை.அனுமனுக்கு இலை எதுவும் காலி இல்லை. ராமன் அன்புடன்.அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொல்கிறார். அனுமன் காய் பழங்களைத்தான் உண்பார் என ராமருக்குத்தெரியும் ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில் அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களைபரிமாரச்சொல்கிறார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் போட சொல்கிறார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடிக்கின்றனர். சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டார் என்று தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக் கொண்டதால் ராமர் சாப்பாட்டு ராமன் ஆகிறார் ..அப்படியே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.
ஸ்ரீ ராம ஜெயம் !!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *