சிவ குக குமர பராசல பதியே! – வாரியார் சுவாமிகள் எழுதியது.
(ஜனகணமன இசையில் பாடவும் .
எவ்வளவு அழகாக பொருந்துகிறது பாருங்கள். ஓம் முருகா !)
சிவ குக குமர பராசல பதியே!
சீரலை வாயுறை நாதா
சிந்தூர செந்தளி பழனா புரிவாழ்
திருவேர கமுறை கந்தா!
செங்கதிர் நிகர்தணி காசலம் வந்தாள்!
செம்பழ முதிர்வன எந்தாய்!
தவமருள் ஆறா தாரா!
தவமுனி வரர்பணி வீரா!
தாதா! தருண சுபோதா!
ஜெய ஜெய சங்கர பாலக மணியே!
தாரக மந்திர வியோதா
சிவமே, சிவமே, சிவமே!
சரவண பவ சிவமே!