*சம்ஸ்கிருதம் பற்றி கண்ணதாசன்*
*எந்த ஒரு மொழியையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்து விட முடியாது. அது மட்டும் அல்ல ; அவன் தனக்கே துரோகம் செய்து கொள்கிறான்*.
*வெறுப்பினால் பிற மொழிகளைப் படிக்காது விட்டு விடுகிறவன் , அற்புதமான கருவூலங்களை இழந்து விடுகின்றான்*
*வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம்*
*தமிழைப் போலவே ” தோன்றிய காலம் ” தெரியாத அந்த மொழியில் எவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கின்றன !*
*வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக , இப்போது “பகவத் கீதை” விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்*
*பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமணியைப் போல் சந்தக் கவிதைகள் ஆக்கியுள்ளேன்*
*இந்தச் ”சுயபுராணம்” எதற்கு என்றால் பல மொழி கற்பதில் உள்ள சுகத்தைச் சொல்லவே !*
*தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி இருக்கிறது*
*அவர்களுக்கு வடமொழிப் பயிற்சியும் இருக்குமானால் , மற்றவர்களைத் திகைக்க வைக்கலாம் !*
*சபையில் நிமிர்ந்தது நிற்கலாம் !*
*முட்டாள்தனமாக ”வடமொழி செத்த மொழி ” என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு, நான் என் காலத்தை வீணாக்கி விட்டேன்*
*இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும்*
*ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும் !*
*தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது வெத்து அரசியல்*
*தமிழ் நம் உயிர் ; அது போல் வடமொழி நமது ஆன்மா !*
கண்ணதாசன்
Couldn’t be said better…