குரு வழிகாட்டலின் அவசியம்..!

குரு வழிகாட்டலின் அவசியம்..!
0Shares
குரு வழிகாட்டலின் அவசியம்..!
மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், “குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.
அதற்க்கு அந்த மகான் அவனிடம், “ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா” என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.
அப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..!
உண்மையை உணர்ந்த பக்தன் மாகனின் பாதங்களின் விழுந்து வணங்கி சரணடைந்தான்..!
சற்குரு திருவடிகளே சரணம் சரணம் சரணம்…சிவாயநம

Comments

  1. Jeyagnanavel KS

    Very nice sharing !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *