காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே
பல்லவி
காட்சி தருவாய் அன்னை காமாக்ஷியே
பரம் பொருள் ஆகா நிற்கும் பராசக்தியே
பாதயாத்திரையாய் பார்க்கவந்தோம்
உன் பாதமலர் தன்னை பற்றி நின்றோம்
சரணம் 1
பாலும் சந்தனமும் குங்குமமும் ,மஞ்சள்
நீரிலும் உனை வைத்து வேண்டி நின்றோம்
வேதமும் சொல்லி நல்ல வேள்வி வளர்த்து
வேண்டியதை கேட்கின்றோம் தருவாய் தாயே ————-(காட்சி தருவாய்)
சரணம் 2
நாவில் உன் நாமம் என்றுமிருக்க, நல்ல
ஞானமும் சிந்தனையும் நீ அருள்வாய் ,எங்கள்
தேவையை எந்நாளும் நீ அறிந்து ,தடை
இல்லாது செல்வம் எல்லாம் எமக்கருள்வாய் ————-(காட்சி தருவாய்)
சரணம் 3
அன்பொடும் பண்பொடும் விளங்கிடும் குடும்பமும் நண்பரும் கொடு தாயே
இன்பமும் இனிமையும் கலந்த நல் வாழ்வையும் வழங்கிக் காப்பாயே
ராகமும் தாளமும் கொண்ட இசையோடு கலைகளை தருவாயே
மதுரை மீனாக்ஷி காசி விசாலாக்ஷி அன்னை காஞ்சி காமாக்ஷியே
அன்னை காஞ்சி காமாக்ஷியே
அன்னை காஞ்சி காமாக்ஷியே
—ஸ்ரீரங்கம் ரமேஷ்