காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே

காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே
0Shares

காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே

 

பல்லவி

காஞ்சியில் காட்சி தரும் காமாக்க்ஷியே

காணும் காட்சியெல்லாம் உனதாட்சியே

ஊரெங்கும் வீதியிலும் வீட்டினிலுள்ளும் 

பக்தர்களின் உள்ளத்திலும் கோவில் கொண்டாயே

(காஞ்சியில்..)

சரணம் 1

 

மண்ணாய் மண்ணில் செடியாய்  செடியில்

மலராய்  மலரில் தேனாய்

புழுவாய் பருந்தாய் பிறவியில் பலவாய்

அவற்றுள்எமை பெற்றாயே

மறைவாய் உருவாய் உருவின் பொருளாய்

முன்னும் பின்னும் ஆனாய்

வருவாய் வந்தருள் தருவாய் தந்தது

காப்பாய் காமாக்ஷி தாயே

(காஞ்சியில்…)

சரணம் 2

 

நிழல் தரும் மரமாய், நிறைந்திடும் கனியாய் ,

பயிராய் ,பயிர்வளர் கதிராய்

கதிர் தரும்  ஒளியாய் ,உயிர்தரும் காற்றாய்

வேராய், வேர்த்தொடும் நீராய்

ஊண் வளர்  உணவாய் ,நோயறு மருந்தாய்

அன்பாய், ஆசை கடலாய்

உறவாய், சகலமும் நீயாய் நின்றாய்

காப்பாய் காமாக்ஷி தாயே

(காஞ்சியில்..)

 

 – ஸ்ரீரங்கம் ரமேஷ்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *