வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,
“தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்” என்று கம்பர் கூறுகிறார்.
“தாமரையோ செவ்வண்ணம் உடையது.
மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா
சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?”
என்று கண்ணதாசன் கேட்டார்,
அதை “தாம் அரைக் கண்ணால்”‘ என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?”
என்று வாரியார் விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.