கருணை கொண்ட கண்களே போற்றி – ஸ்ரீரங்கம் ரமேஷ்

0Shares
கருணை கொண்ட கண்களே போற்றி
– ஸ்ரீரங்கம் ரமேஷ்
பல்லவி
கருணை கொண்ட கண்களே போற்றி
கண் தூங்கா தாயே போற்றி
மண் வாழும் மக்கள் எல்லாம்
உன் காலடியில் சரணம் தாயே
சரணம் 1
பெண் நீயே இங்கு
தாய்க்கெல்லாம் தாயாய் நின்றாய்
முன்வருவது எல்லாம் கண்டு
எமை என்றும் நீயே காப்பாய்
தான் என்றும் தன்னது என்றும்
ஒன்றில்லை கருணை தாயே
எல்லாமும் நீயே ஆனாய்
உனதான எம்மை காப்பாய்
(கருணை கொண்ட)
சரணம் 2
மந்திரங்கள் வேதங்கள் சொல்லி
மாதவங்கள் செய்வது அறியோம்
தந்திரமும் சூதும் அறியோம்
வேற்றுமையும் பழியும் அறியோம்
எங்களுக்குச் சொந்தம் நீயே
உனை மட்டும் வேண்டி கிடப்போம்
மங்காத வாழ்வு தந்து
எமை அருள்வாய் தங்கத் தாயே
(கருணை கொண்ட)
– ஸ்ரீரங்கம் ரமேஷ்
Pic: Meenakshi Temple , Madurai.TN

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *