கமலா தேவி சட்டோபாத்யாய்

கமலா தேவி சட்டோபாத்யாய்
0Shares
கமலா தேவி சட்டோபாத்யாய்
மதத்தை பரப்புவதற்காக கிறித்தவ மிஷநரியால் அஸ்ஸாமுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார் அவரது பெயர் க்ரூஸ் ..
அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்.
போதகர் மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார். அந்த பையனின் பாட்டி தான் அந்த ஏரியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார் ..
பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி மதம் மாற்றி விட்டால் அந்த ஊரையே கிறித்தவத்திற்கு மாற்றலாம் என்று அவர் நினைத்தார்.
பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார் ஏசு எப்படி குஷ்டரோகிகளின் குஷ்ட நோயை குணப்படுத்தினார் எப்படி குருடர்களுக்கு பார்வை கொடுத்தார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனார் ..
ஆனால் இந்து சனாதனத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ள பாட்டி சொன்னார்…
எங்கள் ராமனின் பாதங்கள் பட்டதிலேயே ஒரு கல்லாய் இருந்த அகலிகை சாபம் நீங்கி பெண் வடிவம் பெற்றாள் .. லங்கா செல்ல அமைக்கப்பட்ட ராம சேதுவில் ராமரின் பெயரால் கடல் நீரில் போட்ட கற்கள் இன்றளவும் மிதக்கின்றன இப்படி பாட்டி பல நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே இருந்தார்
பாதிரியார் முயற்சியைத் தொடர்ந்தார் .. ஆனால் அவரது தந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போனது.
ஒரு நாள் சர்ச்லிருந்து கேக் கொண்டுவந்தார் பாட்டி கேக் சாப்பிட மாட்டாள் என்று நம்பினார் ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பாட்டி கேக்கை எடுத்து சாப்பிட்டார்
”வெற்றி வெற்றி” என்று பாஸ்டர் மகிழ்ந்தார். பாட்டி நீங்கள் சர்ச்சின் பிரசாதத்தை சாப்பிடுகிறீர்கள் நீங்கள் இப்போது ஒரு கிறித்தவர் உங்கள் பெயர் ஆட்ரே. நான் இங்கே உங்களை கிறித்துவத்திற்கு மாற்றுகிறேன் என்றார்
பாட்டி சொன்னாள் ”நீ எவ்வளவு பெரிய மூடன் ஒரு துண்டு கேக் சாப்பிட்டதற்கே நான் ஒரு கிறிஸ்டியன் என்றால் தினமும் என் வீட்டில் இருந்து உனக்கு நான் உணவு கொடுத்திருக்கிறேன். அதனால் நீ ஏன் இந்துவாக மாறக்கூடாது? இந்த மண்ணின் உணவு காற்று தண்ணீர் இவற்றை தினமும் உட்கொள்கிறாய். உன் வாதப்படி பார்த்தால் நீ என்றோ இந்துவாக மாறிவிட்டாய்!” என்றார்
இந்த வயதான பெண் மதத்தின் பெயரால் நாட்டை தவறாக வழி நடத்த விடாமல் காப்பாற்றியதுடன் மேலும் பல அஸ்ஸாமியர்கள் வழி தவறி செல்லாமல் தடுத்தார்.
அவர்தான் புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீராங்கனை கமலா தேவி சட்டோபாத்யாய்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *