ஓம்நமசிவாய பாடல் 7

ஓம்நமசிவாய பாடல் 7
0Shares

ஓம்நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்
ஓம்நமசிவாய ஓம் ஓம் நமோ நமோ
ஓம்நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்
ஓம்நமசிவாய ஓம் ஓம் நமோ நமோ

நீர் நிலம் நெருப்பு வானம் காற்றென விரிந்தனை
அறுசுவைகளில் புதைந்து உயிர் வளர்த்து காத்தனை
சப்தமாய் ஸ்பரிசமாய் நறுமணத்தின் நாதனாய்
உருவமாய் முன்னிருந்து எமையியக்கும் தேவனே__( ஓம்நமசிவாய….)

தோம் தித்தோம் தித்தோம் என தாள வாத்தியம் முழங்க
சலங்கை கட்டும் கால்களில் ததீம் ததீம் ததீம் என
தப்பாத தாளத்தோடு பொற்பதம் பதித்து ஆடுவாய்
மேலான மௌனசப்தமாய் ஓங்காரம் கண்ட ஈசனே __( ஓம்நமசிவாய….)

நீர் அணிந்த மேனியோடு நீள் சடை பிரண்டு ஆட
தோல் கிழித்து ஆடைகொண்டு ஆடும் அலங்காரனே
உடுக்கொலி தெரித்ததில் சமஸ்க்ரிதம் சமைத்தனை
அருந்தமிழ் கொடுத்தெமை வாழவைக்கும் தெய்வமே __( ஓம்நமசிவாய….)

மலை மகள் உமை அவள் மேனி உன்னில் பாதியாய்
சடை சிரம் நனைத்திறங்கும் அலைமகள் கங்கையாம்
இடைவிடாது நவ கிரகங்கள் உருண்டுருண்டு சுற்றவே
நடம் புரி நடம் புரி நில்லாமல் நட ராஜனே__( ஓம்நமசிவாய….)

 

அகம் கவர்ந்த சிந்தையில் புறம் அடங்க கண்டவன்
புறம் விளைந்தவற்றை நெஞ்சகத்தில் கொண்டு விட்டவன்
அகம் புறம் இரண்டற இணைந்த இன்ப ஜோதியில்
சுகம் வளர்க்கும் சித்தம் கொண்டு நடமிடும் நடேசனே __( ஓம்நமசிவாய….)

சுயம்பு லிங்க மாக வந்த ஆதி இல்லா ஜோதியே
இயங்குகின்ற கோள்களுக்கு அந்தமில்லா சொந்தமே
பகலுறங்கி இரவிழிக்கும் சாயும் சந்தி இன்பமே
இகம் பரம் இரண்டும் ஆனா பழைய பரமேசனே__( ஓம்நமசிவாய….)

சத்தியம் உரைக்கும் நெஞ்சின் சித்தம் சிறை கொண்டவன்
உத்தமர்கள் ஊழ்வினைகள் மாற்றவல்ல அற்புதன்
சர்ப்பம் சூழ்ந்த மேனியோடு சந்தி ரப்பிறை அணிந்த
மாய மஹாதேவனே ஆதி பெரும் யோகியே__( ஓம்நமசிவாய….)

– ஸ்ரீரங்கம் ரமேஷ்

Comments

  1. H B Murali

    மிகவும் அருமை. சிவ பெருமானின் மகிமையை மிக அழகாக பறை சாற்றும் ஒரு உன்னதமான‌ பாடல். கவிஞ்ர் ரமேஷ்க்கு பாராட்டுகள் பல பல

  2. Narayan

    As always kudos to your skills Ramesh, very nice 👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *