“ஆயிரம் நிலவே வா”
எம்ஜிஆர் அவர்கள் திரைத்துறையில் கோலாச்சிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் ஸ்டுடியோவில் ஷூட்டிங் இடைவெளியில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்த போது “உன் விழியும் என் வாளும் சந்தித்தால்”- TMS அவருக்கு பாடிய பாடல் தெலுங்கில் பாடுவது காதில் விழ, யார் அந்த பாடல் பாடியவர் என்று கேட்க, உதவியாளர் விசாரித்து வந்து ” யாரோ SP பாலசுப்பிரமணியம்” என்ற பையன் பாடுவதாக தெரிவித்துள்ளார்..
அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் தன் அடிமைப் பெண் படத்திற்கு இசை அமைக்கும் கே.வி.மகாதேவன் அவர்கள் இடம்
“உங்களுக்கு தெலுங்கில் புதிதாக பாடும் S.P.பாலு என்ற பையனை தெரியுமா?”என்று கேட்க , அவரும்”தெரியும்”
என்று சொல்ல,”இந்த படத்தில் வரும் டூயட் பாட்டுக்கு பொருந்துவாரா?”
என்று கேட்க, அவரும்
” பொருந்துவார்– திறமையான பையன் தான்”என்று கூற, அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்த SPB யின் அறைக்கு தயாரிப்பு நிர்வாகி பத்மநாபன் சென்று அழைத்து வர, பின்னர் சில தினங்கள் சுசீலா அவர்கள் உடன் ரிகர்சல் நடக்க,
“ஒரு வாரம் கழித்து பாட்டு ரிக்கார்டிங்..முதல் நாள் கடைசி ரிகர்சல்.பாடல் ரிக்கார்டிங் முடித்து எடுத்துக் கொண்டு உடனே 150 நபர்கள் உடன் ஜெய்ப்பூர் சென்று ஷூட்டிங்”என்று கூறி அனுப்பி வைத்தனர்.
அதற்கு அடுத்த இரண்டாவது நாள் முதல் SPB க்கு காய்ச்சல்.. அது டைபாய்டு ஆக இருக்க, கிடைத்த வாய்ப்பை நழுவ விடவும் மனம் இல்லாமல் சொல்லவும் முடியாமல் தயங்கி கொண்டு இருக்க,
ரிகர்சல் நாள் அன்று அழைக்க வந்த தயாரிப்பு நிர்வாகி பாலுவைப் பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்டு,
“நான் சின்னவர் கிட்ட சொல்லி விடறேன் தம்பி.. நல்ல சான்ஸ்..விட்டுட்டியே”என்று கூறி விட்டு செல்ல…
கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமே என்று SPB வருந்திக் கொண்டு இருந்த ஒரு நாளில் அதே தயாரிப்பு நிர்வாகி பத்மநாபன் நேரில் வந்து,” சின்னவர் அழைத்து வர சொன்னார்”என்று கூற,”ஒரு வேளை வேறு ஏதேனும் வாய்ப்பு தருவாரா?”என்று ஏராளமான கேள்விகள் உடன் SPB செல்ல..
மீண்டும் அதே பாடல் சுசீலா உடன் ரிகர்சல். ரிக்கார்டிங் நடக்க..SPB க்கு தன்னையே நம்ப முடியவில்லை.. ஜெய்ப்பூர் ஷூட்டிங் என்ன ஆயிற்று என்று கேட்கவும் பயம்..
பிறகு பட ரிலீஸின் போது பல தயாரிப்பாளர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் இருக்கும் போது
“இந்த பையன் SPB நல்ல திறமையாக பாடுகிறார்..இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்”
என்று சிபாரிசும் செய்ய…
SPB க்கு கண்ணில் நீர் மல்க, அனைவரும் சென்று விட, எம்ஜிஆர் அருகில் சென்று சற்று அச்சம் கலந்த தயக்கத்துடன்,
“நீங்க நினைச்சு இருந்தா வேற யாரை வச்சு கூட அந்த பாட்டை பாடச் சொல்லி இருக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பையனுக்காக ஷூட்டிங் எல்லாம் தள்ளி வச்சு.. ஏன் ஸார்?”
எம்ஜிஆர் புன்னகை செய்த படி,
“தம்பி..நீ எப்படியும் கல்லூரியில் இந்த பாடலை சுசீலா உடன் இணைந்து எம்ஜிஆருக்காக பாடுகிறேன் என்று சொல்லி இருப்பாய்.. நான் வேறு நபரை பாட வைத்து இருந்தால்,நீ பொய் சொன்னதாக நினைப்பார்கள்.. நான் வேறு பாடலுக்கு உன்னை பாட வைத்து இருந்தால் கூட, “பாலு பாடுன அந்த பாட்டு எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை போல.. அதான் வேறு நபரை வைத்து பாட வைத்து விட்டார்”என்று பேசுவார்கள்.அது வளரும் உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லது அல்ல..”என்று கூறும் போது தான் “ஏன் எம்ஜிஆர் திரை உலகின் முடிசூடா மன்னன் ஆக இருக்கிறார்”என்று புரிந்தது.. என்று SPB தானே ஒரு பேட்டியில் கூறி உள்ளார்..
அந்த பாடல் தான் அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் நிலவே வா” பாடலாகும்.
இது போன்ற குணங்கள் தான் எம்ஜிஆர் என்னும் மனிதர் மறைந்து 35 ஆண்டு கழிந்த பிறகும் கூட கொண்டாடுகிறார்கள்..
MAGNANIMOUS PERSONALITY THY NAME M… G… R….
We miss you very badly SPB Garu!