அண்ணா ‘ அல்ல …’அன்னா… ‘

அண்ணா ‘ அல்ல …’அன்னா… ‘
0Shares
பிராமண குடும்பத்தினர், ‘ஏண்ணா, வாங்கண்ணா, போங்கண்ணா …’ என்று அழைக்கின்றனரே! கணவர் எப்படி அண்ணன் ஆவார்?
சரியான புரிதல் இல்லாத கேள்வி இது.
இது ‘அண்ணா ‘ அல்ல …’அன்னா… ‘
வாங்கோன்னா…
போங்கோன்னா …என்பதே சரி!
‘அன்னா ‘ என்றால்
‘மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.
பிராமணர்களில் வயதில் சிறியவராக இருந்தாலும், தகுதி அதிகமிருப்பவரின் பெயருடன், ‘அன்னா ‘
சேர்த்து அழைக்கும் பழக்கம் உண்டு.
‘அன்னா ‘ என்பது மரியாதைக்குரிய சொல் என்பதற்கு, உதாரணத்திற்கு ஒன்று…
ஒருவர் இறந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, பத்திரிகை, போஸ்டர்கள் எல்லாவற்றிலும் இரங்கல் செய்தியை சொல்லும்போது, ‘அன்னாரது ‘இறுதி சடங்குகள் இங்கே நடைபெறும் என்று குறிப்பிடுவது வழக்கில் உள்ளதல்லவா!
ஆதலால், ‘அன்னா ‘ என்கிற மரியாதை சொல்லையே, பிராமணர்கள் கையாளுகின்றனர். மூத்த சகோதரனைக் குறிக்கும், ‘அண்ணா ‘ இல்லை.
பிற சமூகத்தைச் சேர்ந்த மனைவிய்ர், ஏன் + ங்க, என்று அழைப்பதை, ஏன் + ஆ = ஏன்னா என்று அழைக்கின்றனர்.

1 Comment

  1. Janardhana Madhavarao

    Well explained.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *