அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?
இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
வாருங்கள் அதனைப் பற்றி விரிவாக காணலாம்!
“தவறாக நீங்கள் நினைப்பது:”
“பெண்கள் படிக்க போக கூடாது, பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யனும், உதாரணமாக அடுப்படியில் வேலை மட்டுமே செய்யனும்.”
“இப்படி தானே நீங்கள் நினைத்து இருப்பீங்க?”
“இது தவறாக பரப்பட்ட வதந்தி அவ்வளவு தான்”
“பழமொழியின் உண்மையான அர்த்தம்:”
“அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது”
“குமரி பெண்கள் தலையில் ஒரு படி பூவை வைத்துக் கொண்டு சமையல் வேலை செய்யும் பழக்கம் இருந்தது”
“இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது”
“அனைவருமே விறகு அடுப்பில் தான் சமையல் செய்தாகனும்”
“விறகு அடுப்பை அப்ப அப்ப ஊதுகுழல் கொண்டு ஊதும் வழக்கம் உள்ளது”
“அந்த காலகட்டத்தில் வீட்டில் உள்ள பெரிய வயதான பாட்டிகள் வீட்டில் உள்ள இளம் குமரிகளை பார்த்து நீ அடுப்பு ஊதுற அந்த நேரத்தில் ஒரு படி பூவை தலையில் வைத்துக் கொண்டு அடுப்பை ஊதினால் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும்”
“ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவாங்க”
“அப்படி கூறும் அறிவுரை தான் “அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு? என்று சொல்வது வழக்கம்”
“அடுப்பை ஊதுர பெண்ணுக்கு படி பூ எதற்கு என்பதை தான் மருவி படிப்பு எதற்கு என்று கேட்டதாகவும் இப்ப நாங்க படிக்க போறோம் என்றும் பல பெண்கள் பெருமையாக நினைப்பது உண்டு”
“ஆனால் அந்த காலத்தில் படி பூவை பற்றி தான் சொன்னாங்க அதை நம்ம ஆளுங்க படிப்பாக மாத்திட்டாங்க அவ்வளவு தான்”
Hmm interesting analysis rao
Not sure in those days if elders would have allowed or told to cook without taking bath…